Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
கிழக்கில் கட்சிகளின் நிலை.
Posted By Super User on 09/01/2018 | கட்டுரைகள் | Source: Azzuhoor Cegu Isadeen
கிழக்கில் கட்சிகளின் நிலை.

முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்,  இவை எல்லாம் ஒரே அடிப்படையில் இருந்து வந்த கட்சிகளே.

இவர்களுக்குக் தெரிந்ததெல்லாம் அபிவிருத்தி அரசியல் மாத்திரமே. அதிலும் பல ஊழல்கள். முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் இவர்களது அடைவுகள் பெரும் பூஜ்ஜியமே.

ஒரு உள்ளூராட்சி சபையை இவர்களில் யார் ஆண்டாலும் அதில் எந்த வித்தியாசமும் இருக்க மாட்டாது.

முஸ்லிம் காங்கிரஸூம், மக்கள் காங்கிரஸும் கிழக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை நீடிக்கும் வரை, தேசிய காங்கிரஸும் உயிரோட்டத்துடன் இருப்பது மிக அவசியமானது.

இப்போது NFGG ஊழலற்ற வெளிப்படையான அரசியல் பற்றிப் பேசுகிறது.  அதாவது தாங்களும் அபிவிருத்தி அரசியல்தான் செய்யப் போகிறோம், ஆனால் ஊழலின்றி செய்யப்போகிறோம் என்கிறார்கள். நல்ல விடயம்.

இனத்துவ அரசியல் செய்யமாட்டோம் என்று, கிழக்கு முஸ்லிம்களின் சுயநிர்ணய அபிலாஷைகளை நிராகரிக்கின்றார்கள்.

மூன்றோடு நான்காக கலந்துவிட்ட இவர்களில் யார் அபிவிருத்தி செய்தாலும் அது வரவேற்கத்தக்கதே.

ஆனாலும், NFGG ற்கு  போதுமான அங்கீகாரத்தை வழங்குவது எதிர்கால  ஆரோக்கியமான அரசியலுக்கு அவசியமானதாகும்.

எவ்வாறாயினும், உரிமை அரசியலுக்கான பங்களிப்பைச் செய்யப்போகும் ஆளுமைகளுக்கான வெற்றிடம், இன்னும் காலியாகவே இருக்கின்றது.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்

கிழக்கில் கட்சிகளின் நிலை.
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions