Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா?
Posted By Super User on 04/01/2018 | அரசியல் | Source: Azzuhoor Cegu Isadeen
கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா?

கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா?

பதில் : நமது அரசியல் எத்திசையில் செல்ல வேண்டுமோ, அத்திசையில் தெளிவாகவே எந்தக் கட்சியும் பயணிப்பதாயில்லை.

சரியான பாதையை தெரிந்திருந்தும், அப்பாதையில் செல்வதே தமது கொள்கை என்றும் சொல்லிக்கொண்டு வாக்குகளைப் பெறுவார்கள். ஆனால்  பணத்திற்கும் பதவிக்கும் கொள்கைகளைக் காற்றில் விட்டு விடுவார்கள்

கிழக்கு முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசியமாக பிரகடனப்படுத்தி, சுயநிர்ணய கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்பது புத்தி ஜீவிகளாலும் சிந்திக்கக் கூடியவர்களாலும் உணரப்பட்டு முன்வைக்கப்பட்ட விடயம்.

அதை வலியுறுத்திய மு. காவும் அதிலிருந்து பிரிந்த காங்கிரஸ்களும் இன்று அதை கிடப்பில் போட்டு விட்டு தமது இருப்பை, பதவியை தக்கவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்களில் பலரும் சுயநிர்ணய உரிமயையோ அதை அடைவதற்கான முதற்படியாக கொள்ளத்தக்க கரையோர மாவட்டத்தையோ பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி, சொற்ப இலாபங்களுக்காக ஊழல் அரசியல் வாதிகளின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

அபிவிருத்தி அரசியல்தான் வேண்டும் என்றால் அதற்கு தனித்துவமான கட்சிகள் எதற்கு? பேரினக் கட்சிகளுடன் கூட்டு வைத்துள்ள அனைத்து காங்கரஸ்களும், ஐக்கிய தேசியக் கட்சியிலோ சுதந்திரக் கட்சியிலோ சேர்ந்து விடலாம்.

கூட்டமைப்பாக இயங்குமாறு விடுத்த அழைப்புக்களுக்கும் முழுமையான  வெற்றி  கிடைக்காத நிலையில், இவர்கள் இனியும்  சிந்தித்து சமூகத்திற்கு நன்மையான விடயங்களைச் செய்வார்கள் என்று நம்ப இயலவில்லை.

இந்நிலமைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் தேசிய சமாதான கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

மக்களின் உரிமைகள் தொடர்பில் காத்திரமான சில நகர்வுகளைச் செய்த ஹஸனலி அவர்கள் இதன் தலைவராகியிருப்பது, நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டுவதாயுள்ளது.

ஆனால் மு.காவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து பழைய ஊழல் பேர்வழிகளுக்கே தமது கூட்டமைப்பிலும் வாய்ப்புகள் வழங்குவது நெருடலாக உள்ளது.

எது எவ்வாறாயினும், உள்ளூராட்சித் தேர்தலின் பின் இவர்களது நடவடிக்கைகள் முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் அக்கறை காட்டுவதாக அமையவில்லை என்றால், கிழக்கின் எழுச்சியால் உரிமைப் பசி கிளறி விடப்பட்டு இன்றுவரை அமைதியாக இருக்கும் இளைஞர்களின் கருத்துக்களை உள்வாங்கி, புதிய முடிவுகளை எடுக்க ஆலோசித்துள்ளோம்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்
செயலாளர்
கிழக்கின் எழுச்சி   

கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா?
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions