Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 -
Posted By Super User on 25/12/2017 | செய்திகள் | Source: Editor Sanakyam
றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.  சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 -

றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - ஞாயிற்றுக்கிழமை  நடைபெற ஏற்பாடாகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள் பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருதைச் சேர்ந்த வேட்பாளரின் தேர்தல் பணிமனை திறப்புவிழா நிகழ்விலும் மு.கா தலைவர் றவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.

இதனை அறிந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இளைஞர்களும் சாய்ந்தமருது மக்கள் பணிமனை முன்றலில் அணிதிரண்டனர். அங்கு குழுமிய பொதுமக்கள் சாய்ந்தமருது பிரகடத்தை மீறி நடைபெற ஏற்பாடாகும்  குறித்த இரு நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டனர். 

மேற்படி பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் நிலமையை சுமுகமானதாக ஆக்கவும் பல பிரமுகர்கள் தலையீடு செய்தபோதும் பொதுமக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது போனது. பொதுமக்கள் பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் போட்டதுடன் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன் பின்னர், அங்கு மேலும் பல பொதுமக்களும் இளைஞர்களும் வந்து சேர்ந்ததால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இவர்கள் அனைவரும் கால்நடையாகவு ம் மோட்டார் பைசிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பேரணியாக நிகழ்வு நடைபெறவிருந்த தோணா பகுதியை நோக்கி விரைந்து சென்றனர். 

தோணாவுக்கு செல்லும் வீதியிலேயே குறித்த தேர்தல் காரியாலயம் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த காரியாலத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 

குறித்த காரியாலயத்தை அடைந்த பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் பட்டாசுகளை கொழுத்தியும் கறுப்புக் கொடிகளை காட்டியும் கோஷங்களை எழுப்பியவாறும் நின்று அந்த நிகழ்வில் சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் சாய்ந்தமருதுக்குள் நுழையக் கூடாது என உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு முறுகல் நிலையும் காணப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது குறித்த காரியாலயத்தினுள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஒழிந்திருந்ததாகவும் பொதுமக்கள் கலைந்து சென்றபின்னர் தனது வாகணத்தில் ஏறி தப்பியோடியதை தாம் அவதானித்ததாகவும் சில இளைஞர்கள் பேசிக் கொண்டதையும் கேட்க முடிந்தது.

பின்னர், தோணா பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் அந்த இடத்தில் குழுமி நின்றவாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலயம் அங்கு கூடி நின்ற பொதுமக்கள் சாய்ந்தமருது மண்ணையும் மக்களையும் பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றிய தலைமையும் அந்த கட்சியின் அரசியல்வாதிகளும் எமது ஊருக்குள் வர ஒருபோதூம் அனுமதிக்கப் போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டனர். 

இந்த தோணா பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளும் பொருட்டு பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

இந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை வீடியோ பண்ணுவதற்காக அந்த இடத்திற்கு வந்த மு.கா வின் முகநூல் எழுத்தாளர் ஒருவரை பொதுமக்கள் விரட்டியடித்ததையும் காண முடிந்தது.

இறுதியாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரது வீடுகளுக்குச் சென்ற பொதுமக்கள் அவர்களை சாய்ந்தமருது பிரகடணத்தை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது.

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions