Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா?
Posted By Super User on 18/12/2017 | அரசியல் | Source: Editor Sanakyam
NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா?

படத்தில் இணைக்கப்பட்டுள்ள அப்பியாசக் கொப்பிகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் சென்ற 16ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடியில் வீடு வீடாகச் சென்று கொடுத்திருக்கின்றனர்.

இணைத்திருக்கும் அப்பியாசக் கொப்பிகளின் படங்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை.

இதனை ஒரு வார்த்தையில் சொல்லப் போனால் 'வங்குரோத்து அரசியல்' என்று சொல்லலாம்.

தேர்தல் காலங்களில் இவ்வாறான அன்பளிப்புகள் அது மாமூடையாக இருந்தாலும் சரி,அப்பியாசக் கொப்பிகளாக இருந்தாலும் சரி,மஞ்சள் கவர்களாக இருந்தாலும் சரி கொடுப்பது சட்டவிரோதமானவை. மக்கள் வாக்குகளை வாங்குவதற்காக கொடுக்கப்படும் லஞ்சங்கள்தான் இவை.தேர்தல் இல்லாத காலங்களில் கொடுப்பது வேறு.தேர்தல் காலங்களில் கொடுப்பது வேறு.நல்லெண்ணத்தோடு தேர்தல் காலங்களில் இவை கொடுக்கப்படுவதைக் கூட அனுமதிக்க முடியாது.

இந்தக் கீழ்த்தரமான வேலைகளைக் கொள்கைகள் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் செய்வார்கள். தங்களின் கொள்கைகளை விற்க முடியாதவர்கள் பணத்தை வீசி,பொருளை வீசி,சலுகைகளை வீசி வாக்கை வாங்கப்பார்ப்பார்கள்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் ஒரு புது அரசியல் கலாச்சாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் அதன் தவிசாளரின் ஊராக காத்தான் குடியில் தேர்தல் காலங்களில் வீடு வீடாக அப்பியாசக் கொப்பிகள் பகிர்ந்து திரிகின்றனர். அவற்றைப் பொலீசார் பறிமுதல் செய்ததாகவும் அறியக் கிடக்கிறது.

இதுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தோற்றுவிக்க விரும்பும் அரசியல் கலாச்சாரமா என்ற கேள்வியை அவர்களின் தலைமைத்துவ சபையினரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

எந்த அரசியல் கலாச்சாரத்தை எமது மக்கள் வெறுக்கிறார்களோ,எந்த அரசியல் கலாச்சாரத்தை நாம் மாற்றுவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோமோ அதே அரசியல் கலாச்சாரத்தை அரங்கேற்றிவிட்டு புதிய அரசியல் கலாச்சாரம் படைப்போம் என்று சொல்வது உங்கள் கட்சியினதும்,உறுப்பினர்களினதும் உண்மைத் தன்மையினைக் கேள்விக்குட்படுத்துகிறது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி உங்கள் கொள்கைகளைப் பேசுங்கள்.கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள்.உங்கள் கருத்துக்களைக் கொண்டு மக்களை உங்கள் பக்கம் ஈர்க்கப் பாருங்கள்.

இந்தக் கேவலமான அரசியலைத்தான் நீங்களும் செய்யப்போவதாக இருந்தால் புதிய அரசியல் கலாச்சாரம் படைக்கப் போகிறோம் என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு நான்கோடு ஐந்தாக தேர்தலில் இறங்க்குங்கள்.

 புதிய அரசியல் கலாச்சாரம் படைக்கப் போகிறோம் என்று பள்ளிகளில் நின்று கொண்டு நோட்டீஸ் பகிர்வதற்கு முன்னர் உங்கள் கட்சியின் இந்தக 
அசிங்கமான கலாச்சாரத்தை நிறுத்தப் பாருங்கள்.

Raazi Muhammadh Jaabir

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions