Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி.
Posted By Super User on 17/12/2017 | அரசியல் | Source: Editor Sanakyam
அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி.

அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி.
============================================

அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தல் வேட்புமனுவில் அகில இலங்கை மக்கள் காங்கிறசின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.அதே போல் சம்மாந்துறைப் பிரதேச சபையில் தேசிய காங்கிறசின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த இரண்டு செய்திகளும் எனக்கு நெருடலாகவே இருந்து வந்தன.இவை இரண்டும் ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிறசின் வேட்பு மனுவும் சம்மாந்துறையில் தேசிய காங்கிறசின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டமைக்குச் சொல்லப்பட்ட காரணங்கள் மிகவும் சிறு பிள்ளைத் தனமாக இருந்தன.
இதன் உண்மைத் தன்மையை நான் தேட முற்பட்டேன்.இறைவனின் அருளைக் கொண்டு கண்டு பிடித்துவிட்டேன்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மக்கள் காங்கிறசின் வேட்பு மனு மூன்று காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

1.அதிகாரபூர்வமான நபர் கையெழுத்திடவில்லை.
2.போதுமான வேட்பாளர்கள் இல்லை.
3.போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
மேற்சொன்ன மூன்று காரணங்களுக்காகத்தான் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களை வாசிக்கும் போதே ஏதோ ஒன்று உதைக்கும்.
இத்தனை காலம் அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு வேட்புமனுவில் எத்தனை வேட்பாளர்கள் வர வேண்டும் என்பதும்,அவர்கள் என்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் தெரியாதா?வேண்டுமென்றே இது நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சதியை அரங்கேற்றி இருக்கிறார்கள் போலவே எண்ணத் தோன்றுகிறது.

ஆதாரம் வேண்டுபவருக்கு இன்னும் சொல்கிறேன்.
அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலுக்கு மக்கள் காங்கிறசின் போனஸ் பட்டியலில் பின்வருவோரின் பெயர்கள் இருக்கின்றன.

01.சீனி முஹம்மது அப்துல் கபூர் 
02.ஆப்தீன் ஜெஸ்மின்
03.முஹம்மத் இப்ராஹீம் நிர்பான்
04.ஆதம்பாவா கதீஜா உம்மா
05.ஹயாத்து முஹம்மது றிஸ்னா
06.சம்சுடீன் சகிய்யா
07.முஹம்மட் சரிப் முஹம்மது ஸஹிட்
08.முஹம்மது அபு பக்கர் சனுபா

மேற்சொன்ன 8 பேரும் அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மக்கள் காங்கிறசின் போனஸ் பட்டியலில் இருக்கிறார்கள்.ஆனால் இருக்க வேண்டியவர்கள் 11 (8+3)  பேர்.இது நிராகரிக்கப்படவேண்டும் என்பதற்காக 3 பேரின் பெயரை போடாமல் விட்டிருக்கலாம்.

அதே நேரம் சம்மாந்துறைப் பிரதேச சபையில் தேசிய காங்கிறசின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.காரணத்தைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்பு வரும்.அதே காரணம்தான்.வேட்பாளர்கள் போதாமை.
சம்மாந்துறை பிரதேச சபைக்கு தேசிய காங்கிறஸ் பின்வருவோரின் பெயர்களை போனஸ் பட்டியலில் இட்டிருந்தது.

01.அமீர் அன்சார் அஹமட் ஆகிப்ரி
02.புகாரி அஜினாஸ்
03.பாறுக் முஹம்மட் சப்றாஸ்
04.அப்துல் பஸீர் முஹம்மட் ஸியாம்
05.உதுமாலெப்பை முஹம்மட் றியாஸ்
06.சாதிக்கா பானு
07.அகம்மட் செய்த்தாறிக் அகம்மட்
08.அப்துல் அஸீஸ் உம்மு சபீரிய்யா 
09.முகம்மட் அலியார் லிபிரியா
10.இஸ்மாலெவ்வை பலூனா

சம்மாந்துறை பிரதேச சபைக்கு10 வட்டாரங்களுக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். வீரமுனை வட்டாரம் மூன்று உறுப்பினர்கள் கொண்ட பல் அங்கத்துவ வட்டாரமாகும்.   

மேற்சொன்ன சம்மாந்துறைப் பிரதேச சபைக்கான வேட்பு மனுப்பத்திரத்தில் போனஸ் பட்டியலில் 10 பேரின் பெயர்கள் இருக்கின்றன.ஆனால் இருக்க வேண்டியது 11(8+3) பேர்.திட்டமிட்டு நிராகரிக்கப்படவேண்டும் என்பதற்காக ஒருவரின் பெயரை விட்டிருக்கலாம்.

காரணம் என்னவாக இருக்கலாம்.

அதாவுல்லாஹ் அவர்களின் அரசியல் அக்கரைப்பற்றை மாத்திரம் மையப்படுத்திய மிகவும் குறுகிய சுயநல அரசியல்.இந்த முறை அக்கரைப்பற்றில் நடைபெறும் தேர்தலில் அதாவுல்லாஹ் கணிசமான வெற்றி பெறாவிட்டால் அவரின் அரசியல் எதிர்காலம் அப்படியே முடிந்துவிடும்.அக்கரைப்பற்று மா நகரசபைக்கு பல கட்சிகள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்று ஏலவே அதாவுல்லாஹ் பயந்து கொண்டிருந்தார்.அக்கரைப்பற்றில் அவரின் வெற்றியை உறுதி செய்வதற்கு கேள்விக்குறியாக இருக்கும் எந்த ‘ரிஸ்கையும்’ அதாவுல்லாஹ் எடுக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

சம்மாந்துறைப் பிரதேச சபையில் அதே நிலைமைதான் ரிஷாட்டிற்கும்.அம்பாரை மாவட்டத்தில் தனது காலை ஊன்ற நினைக்கும் ரிஷாட் அவர்கள் சம்மாந்துறைப் பிரதேச சபையை தன்னை விட்டுத் தூரமாக்கும் எந்த ‘ரிஸ்கையும்’ எடுக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

அதாவுல்லாஹ்விற்கு அக்கரைப்பற்று மாநகர சபை வேண்டும்.ரிஷாடிற்கு சம்மாந்துறைப் பிரதேச சபை வேண்டும்.

இருவரும் ஒரு புரிந்துணர்விற்கு வந்து இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அக்கரைப்பற்றை றிஷாட் அதாவுல்லாஹ்விற்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்.சம்மாந்துறையை அதாவுல்லாஹ் றிஷாட்டிற்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஆதரவாளர்களையும் வேட்பாளர்களையும் சமாளிப்பதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வது போல் தாக்கல் செய்து, அதில் குழந்தைத் தனமான பிழைகளைச் செய்து நிராகரிக்க வைத்திருக்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

இல்லை.இந்த இரண்டு சம்பவங்களும் சந்தர்ப்பவசமாகவே நடந்திருக்கின்றன என்பதை ஏற்க மனம் தயங்குகிறது.

இது உண்மையாக இருக்குமிடத்து,பாவம் அப்பாவி மக்களும் வேட்பாளர்களும். தங்கள் தலைவர்கள் இருவரும் செய்த டீல்கள் தெரியாமல் நடந்தவை எல்லாம் ஒரு வெற்று விபத்து என்று நம்பிக்கொண்டு தலைவா வாழ்க என்று இன்னும் கோஷமிடுகிறார்கள்.

மக்களை ஏமாற்றும் இந்த அரசியல் தலைவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதைப் புரியாமலே அப்பாவி மக்களின் காலங்கள் கழிகிறது.

வாழ்க ஜனநாயகம்.

 

Raazi Muhammad Jabir

அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி.
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions