Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடித்தது மின்கம்பி அறுந்து 7 பேர் கருகி சாவு
Posted By Super User on 10/7/2017, | செய்திகள் | Source: DT
மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடித்தது மின்கம்பி அறுந்து 7 பேர் கருகி சாவு

மைசூரு மாவட்டம் உனசவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுஜைய் (வயது 18), பிரவீன் (20), சுவர்ணம்மா (45), சுதீப் (21), உமேஷ் (26), திம்மேகவுடா (60), புட்டண்ணா (55). அனைவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து நேற்று மதியம் தங்களுடைய ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக நந்திநாதபுரம் கிராமத்தையொட்டி உள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டி சென்றனர்.

அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதையடுத்து அனைவரும் அங்குள்ள ஒரு சிறிய கோவிலில் ஒதுங்கி நின்றனர். கோவிலின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் மின்னல் தாக்கியது. இதில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீப்பிடித்தது.

இதனால் மின்கம்பி அறுந்து 11 தொழிலாளர்கள் நின்றிருந்த கோவிலின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி சுஜைய், சுவர்ணம்மா, சுதீப், உமேஷ், திம்மேகவுடா, புட்டண்ணா ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். 

மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடித்தது மின்கம்பி அறுந்து 7 பேர் கருகி சாவு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions