Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு
Posted By Super User on 10/7/2017, | செய்திகள் | Source: DT
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் காலை 6 மணியளவில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 விமானப்படை வீரர்கள், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மண்ணெண்ணெய் கொண்டு சென்ற போது இந்த விபத்து நேரிட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லையில் உள்ள பகுதிகளுக்கு வழங்க ஏற்றிச் செல்லப்பட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஹெலிகாப்டர் 17 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்து சிதறி உள்ளது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் கீழே குதித்து தப்பிக்க முயற்சி செய்து உள்ளார், ஆனால் உயிர்பிழைக்கவில்லை. இந்தியா - சீனா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் பகுதியில் விபத்து நேரிட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ தளபதில், இப்போதைய மத்திய மந்திரி வி.கே. சிங் பேசுகையில், “இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம். மோதலுக்கு வழிவகை செய்ய அதிகமான காரணங்கள் உள்ளது. வானிலை அல்லது தொழில்நுட்ப பிரச்சனையாக இருக்கலாம்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையானது வெளியாகும் முன்னதாக நான் கருத்து தெரிவிக்க கூடாது,” என குறிப்பிட்டு உள்ளார். 

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions