Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயநகர் வந்தார்
Posted By Super User on 10/7/2017, | செய்திகள் | Source: DT
பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயநகர் வந்தார்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சசிகலா தரப்பில் பரோல் கேட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள், சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா  மாலை பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து காரில் சசிகலா புறப்பட்டு சென்னைக்கு சென்றார். காரில் முன் இருக்கையில் தினகரன் அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் சசிகலா அமர்ந்திருந்தார். சசிகலா காருடன் 10 கார்களில் அ.தி.மு.க.(அம்மா) பிரமுகர்கள் சென்றனர்.

வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் கட்சியினர் சசிகலாவை பார்ப்பதற்காக திரண்டிருந்தனர். காரில் இருந்தவாறு சசிகலா கைகூப்பி வணக்கம் தெரிவித்தவாறே சென்றார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, பர்கூர் வழியாக சென்னை வந்த சசிகலா, சென்னையில் உள்ள தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். 

பரோலில் விடுவிக்கப்பட்ட சசிகலா சென்னை தியாகராயநகர் வந்தார்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions