Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
Posted By Super User on 9/23/2017, | வெளிநாடு | Source: DT
மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்  6.1 ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மெக்சிகோ மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடந்த சில தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில்  248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions