Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
தூய்மை பற்றி ஹகீம் பேசலாமா?
Posted By Super User on 9/20/2017, | அரசியல் | Source: Azzuhoor Cegu Isadeen
தூய்மை பற்றி ஹகீம் பேசலாமா?

அறிக்கை மன்னர் என்று ஹகீம் நையாண்டி செய்யும் அதே ஹஸனலி, நவநீதம் பிள்ளையிடம் கொடுத்த அறிக்கையினை, மகிந்தவின் கபினட்டில் போய் நான் கொடுக்கவில்லை ஹஸனலிதான் கொடுத்தார் என்று காட்டிக்கொடுத்து அப்ரூவர் ஆனவர்தான் இந்த ஹகீம்.

இது போன்ற அறிக்கைகளின் தயவில்தான் இத்தனை காலம் தான் வயிறு வளர்த்தது என்பதையும் மறந்து போனார்.

மறைந்த தலைவர் எட்டாத உச்சத்தை தான் எட்டியதாக சொல்லும் ஹகீம், அதனால் சமூகத்திற்குப் பெற்றுக்கொடுத்த நன்மைகள் என்ன? வன்னியிலும் திருகோணமலையிலும் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்ததுதானா எட்டிய உச்சம்?

இன்னும் ஒரு வருடத்திற்கு  மாகாண சபை நீடிக்கப்பட்டால் மு.கா முதலமைச்சர் இன்னும் ஒரு வருடம் பதவியிலிருப்பார் என்கிறார் ஹகீம். இந்த முதலமைச்சர் இது வரை பெற்றுத்தந்த உரிமைகள் என்ன? இந்த முதலமைச்சரால் கிழக்கு அடைந்த நன்மைகள் என்ன? 20ம் திருத்தத்திற்கு திருகுதாளம் போட்டது தான் சாதனை.

முன்று முறை நான்கு முறை தேசியபட்டியல் கொடுத்தேன் என்கிறார். யார் வீட்டு தேசிய பட்டியலை யார், யாருக்குக் கொடுப்பது? அவரது அப்பன் வீட்டுச் சொத்தைக் கொடுத்தது போல் அங்கலாய்க்கிறார்.

இவ்வளவு காலமும் கிழக்கிற்கான கபினட் அமைச்சுப் பதவியை ஹகீம் சுரண்டி வைத்திருப்பதை எந்தக்கணக்கில் சேர்ப்பது? இதனால் என்ன நன்மைகளை சமூகம் அடைந்திருக்கிறது?

வரலாற்றுத் தவறுகளை சுயநலன்களுக்காகப் பேரம் பேசி விற்று விட்டு, மஹா தவறைச் செய்துவிட்டேன் என்று மேடைகளில் பேசுவது போன்றதல்ல?

தூய முஸ்லிம் காங்கிரஸ் என்று தொடங்க வேண்டி வந்ததே உள்ளே இருந்து ஹகீமைத் தூய்மைப்படுத்த முடியாது என்று தெரிந்ததனால்தான்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவைப் பிரிந்து வர முடியாது என்று அழுதவரை தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்த ஹஸனலிக்குப் பாடம் படிப்பிற்பதற்காக, தேசிய பட்டியலையும், முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியையும் தருவதாக சுன்னத்துத் தொழுது சத்தியம் செய்து ஏமாற்றி நயவஞ்சகம் செய்த உங்களிடம் எங்கிருந்து தூய்மையை எதிர்பார்ப்பது?

ஹகீமிடம் தூய்மை இருந்திருந்தால் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கலாம்.

அபலைப் பெண்களின் பதுவா என்ன செய்யுமென்பதையும் பார்க்க,இருக்கின்றோம்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions