Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெறுகின்றது - ஜே.வி.பி
Posted By Super User on 9/18/2017, | செய்திகள் | Source: க.கிஷாந்தன்
இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெறுகின்றது - ஜே.வி.பி

இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு பதில் கூறும் நிலைக்கு அரசியல்வாதிகளின் நிலைமை சென்றுள்ளது.

அந்தவகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்கால சந்ததியினருக்காக இந்த அரசியல் நிலைமையில் தக்க பதிலை கொடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நுவரெலியா நகர் மத்தியில் 17.09.2017 அன்று இடம்பெற்ற “ஊக்கமுள்ள பிரஜைகள்” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சுரவீர ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் 69 வருட காலத்தை ஜக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஆட்சிகளை மாறி மாறி மேற்கொண்டுள்ளது. ஆனால் அரசியல் இலாபம் கருதிய ஆட்சியாகவே இது அமைந்துள்ளது.

தேர்தல் காலங்களில் வாக்காளர் பலம் கொண்டவர்கள் மக்கள். ஆனால் இந்த வாக்குபலத்தில் ஆட்சி பீடம் ஏறியவர்கள் மக்களுக்காக செய்வது தான் என்ன. நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தோட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கான முக்கிய முதுகெழும்பாக திகழ்கின்றனர்.

ஆனால் அவர்கள் உழைத்து கொடுப்பதற்காக இங்கு வந்த அடிமைகள் மட்டுமல்ல. அவர்களுடைய நலத்திலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் அக்கறை காட்டது. காலத்திற்கு காலம் ஏமாற்றிய வண்ணமே வந்திருக்கின்றனர்.

இவ்வாறானவற்றிற்கு எதிர்காலத்தில் முடிவுகளை எட்ட வேண்டும். அதற்காகவே நுவரெலியாவில் முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி ஊக்கமுள்ள பிரஜைகளை ஊக்குவித்து அங்குராப்பணம் செய்யும் இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையில் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தனது செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நாடு ஊழல் அற்ற நாடாக மாற்றி அமைக்க வேண்டும் என அரசியலுக்கு வந்தவர்கள் இரண்டு வருட காலப்பகுதியில் ஊழல் செய்தவர்களுக்கு துணை போயுள்ளது. கடந்த 69 வருட காலத்தில் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் ஆட்சி பீடம் ஏறிய இரு கட்சிகள் தமது அரசியல் இலாபத்திற்காகவே செயல்பட்டு வந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்காக முதுகெழும்பை வளைத்து உழைத்த தோட்ட தொழிலாளர்கள் இன்று அவர்களின் உடல் மற்றும் வாழ்க்கை உழைப்பு என நாட்டுக்கே அர்ப்பணித்துள்ளனர். அவர்களுடைய எதிர்கால பலத்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கண்ணுற்று செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் அரசியல் நிலைமை இனங்களுக்கான, கலாச்சாரங்களுக்கான துவேசத்துடன் இடம்பெறுகின்றது - ஜே.வி.பி
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions