Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அரசியல் அதிகாரங்களை பெற்றுள்ள நாங்கள் இறைவனிடத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
Posted By Super User on 9/15/2017, | அரசியல் | Source: Haither Ali Mohammed Thamby
அரசியல் அதிகாரங்களை பெற்றுள்ள நாங்கள் இறைவனிடத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்   - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

அரசியல் பணிகளினூடாக மக்களினுடைய திருப்தி மட்டுமன்றி இறைவனுடைய அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கிலேயே எங்களினுடைய ஒவ்வொரு பணிகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என கிழக்கு மாகண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண சபையின் 62 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்திறப்பு விழா 12.09.2017ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பத்து கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகளில் ஒன்றான ஸாவியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றியபோதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 

அரசியல் அதிகாரம் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். அத்தகைய அதிகாரங்களை பெற்றுள்ள நாங்கள் அதனை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பது தொடர்பாக இறைவனிடம் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றது. 

ஆகவேதான் எங்களினுடைய ஒவ்வொரு பணிகளின் போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு மக்கள் எங்களுக்கு வழங்கிய இந்த பொறுப்பினை சரிவர நிறைவேற்ற உழைத்து வருகின்றோம்.

அந்த வகையில் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகவுள்ள கல்வியினை முன்னேற்றுவது தொடர்பாக பல்வேறு செயற்றிட்டங்கள் எங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அதன் ஒரு கட்டமாக இப்பிரதேச மாணவர்களினுடைய கல்வியினை மேம்படுத்தும் முகமாக இப்பாடசாலையின் வகுப்பறைகளை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்பட்ட போது எதிர்காலத்தில் இப்பாடசாலையின் வேறு கட்டடங்களை அமைப்பதற்கான இடவசதி இல்லை என்ற ஒரு விடயத்தினையும் கவனத்திற்கொண்டு நாங்கள் இப்பாடசாலைக்கென மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து அதன் ஒரு கட்டடமாக தற்போது அக்கட்டிடத்திற்கான கீழ்த் தளத்தினை முழுமைப்படுத்தி வழங்கியுள்ளோம். 

எதிர்காலத்தில் தொடர்ந்தும் எங்களது அதிகாரங்கள் நீடிக்கப்பட்டால் இக்கட்டடத்தினை மூன்று மாடிக்கட்டிடமாக பூரணப்படுத்தி வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தனது உரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாபில் Z.A. நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ALM. நசீர் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திரு. சித்திரவேல், பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுருதீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸபி, காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions