Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஹக்கீம் என்னை திருமணம் செய்வார் என நம்பினேன் - குமாரி
Posted By Super User on 9/1/2017, | அரசியல் | Source: அமீர் மௌலானா
ஹக்கீம் என்னை திருமணம் செய்வார் என நம்பினேன் - குமாரி

பெருந்  தலைவர் அஷ்ரபின் தூரநோக்கு கொள்கையின் பயனாக   18 லட்சத்துக்கும் அதிகமான   முஸ்லீம்கள் எமது நாட்டில் சிறுபான்மையாக கணிப்பிடப்பட்டாலும், 6 லட்சத்துக்கும் அதிகமாக  முஸ்லீம்கள் கிழக்கில் பெரும் பான்மையாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையின் அடிப்படையில், பல கட்சிகளாக சிதறுண்டுள்ள முஸ்லீம்களின் வாக்குகளை, ஒன்று சேர்த்தால் கிழக்கில்  எம்மை நாமே ஆளலாம் என்ற புத்துணர்ச்சி பெற்ற புரட்சித் தத்துவத்தின் கீழ்  “முஸ்லீம் காங்கிரஸ்” முஸ்லீம்களின் முதுகெலும்பாக கொடி கட்டிப் பறந்தது  எனலாம். அதற்கேற்ப பெருந் தலைவர்  அஷ்ரபின் கொள்கையில், பாசறையில்  வளர்ந்து,   கட்சியோடு வந்த போராளிகள்,  ஹக்கீமின் தலைமைத்துவத்தில் காணப்பட்ட  நேர்மையற்ற நடத்தைகளின்   ஒவ்வாமை காரணமாக,  போத்தலில் இட்ட எண்ணெய்யும் தண்ணீருமாக ஹக்கீமுடன் போராளிகள்  சமூக,  மனநிலை ரீதியாக அதிருப்தியடைந்து   வேறுபட்டிருந்தாலும், அன்று அதாவுல்லா, அன்வர்  இஸ்மாயில், ஹரீஸ் போன்றோர்கள் முஸ்லீம் காங்கிரசை விட்டு வேறாக்கப்பட்டதைத் தொடர்ந்து,  உள்ளார்ந்த ரீதியாக ஹக்கீமை சரிப்படுத்துவதிலும்,  ஹக்கீம் விழுந்து விடாமல்  முட்டுக்கு  கொடுப்பதிலும், முஸ்லீம்களை நோக்கிய பிழையான முடிவுகளை தடுப்பதிலும், நல்வழியை நோக்கி  மூக்கணாங்கயிறாக  ஹக்கீமை இழுப்பதிலும், முஸ்லீம் காங்கிரசின் மானம் கப்பலேறிவிடும் என்ற பயத்தின் காரணமாகவும்,  ஹக்கீமின் அநியாயங்களை  மறைத்து செயற்பட்டு தங்களது பெயர்களை பழுதாக்கிக் கொண்ட  ஹஸனலி மற்றும்  பஷீர் சேகுதாவூத் போன்ற பல உயர்மட்ட  உறுப்பினர்கள், மீண்டும் மீண்டும்  தொடர் பிழைகளை விதைத்து வந்த  ஹக்கீமால் குழப்பமடைந்து,  கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்ற நிலையில் நாளடைவில் இவர்களுக்கிடையேயான உறவுகள் பனிப்போராக  மாறத் தொடங்கியது எனலாம். இந்நிலை ஏற்பட குமாரியும் குறிப்பிடத்தக்களவு தாக்கம் செலுத்தியிருந்தார் என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய விடயமாகும். 


ஹக்கீம் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வாக்குறுதி வழங்கும்  ஒரு பொய் மூட்டை என்பதும், தனது சுயநலத்துக்கேற்ப சமூகத்தை கூறு போடும் ஏமாற்றுப் பேர்வழி என்பதும் எமது சமூகம் அனுபவித்த உண்மைகள். ஆனால் இது தெரியாத குமாரி ஹக்கீமுடன் காதல் வயப்பட்டு    தன்னைத்    திருமணம் செய்வார்  என்ற    ஹக்கீமின் அந்தப் பாழாய்ப் போன பொய்யை நம்பி தன்னையும், தனது உடம்பினையும் தினமும்   இழந்தது மட்டுமல்லாமல், ஹக்கீமின் வழமையான பாணியில் வேலை முடிந்த பின் கறிவேப்பிலையாக வீசப்பட்டு, காதலில் தோல்வி கண்டதால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட குமாரியும்  ஒரு ஒழுக்கமான நல்ல  பெண்மணி  தான்.  தீக் காயங்களுடன் மனமுடைந்து உயிர் பிரிந்து   கொண்டிருக்கும்  நிலையிலும் கூட   மருத்துவமனையில் பஷீர் சேகுதாவூதை கண்டு ஏதோ சொல்ல  அழுதபடி குமாரி  எழும்பியது பஷீர் சேகுதாவூதின் மனதை நன்றாகவே  வேதனைப்படுத்தி இருக்கும், இதற்கு முன் மூன்று முறை நஞ்சு அருந்தி உயிருக்கு போராடிய  நிலையில் ஹக்கீமின் அவசர தொலைபேசி வேண்டுதலுக்கு அமைய   பஷீர் சேகுதாவூத்தால் மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றப்பட்ட குமாரியின்  உயிர், இன்று நெருப்புக்கு இரையாகி விட்டதே என பஷீர் சேகுதாவூதின் கண்கள் மாத்திரமல்ல மனிதாபிமானம் உள்ளவர்களினது கண்களும் கலங்கத்தான் செய்யும்.


அன்று சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாகவும், ரணில் பிரதமராகவும் இருந்த காலப் பகுதியில் பாராளுமன்றில் சபாநாயகர் யார்? என்ற வாக்கெடுப்புக்கான ஒரு சந்தர்ப்பத்தில், குமாரியை வைத்து ஹக்கீம் மிரட்டப்பட்டு, மாட்டிக் கொண்ட சூழ்நிலையில் தான், குமாரி தொடர்பான  கதைகள், பிரச்சனைகள் யாவும் தொலைபேசி மூலம் ஹக்கீமால் பஷீர் சேகுதாவூதுக்கு கூறப்பட்டதோடு, பாராளுமன்றத்திலும் குமாரியால் மாட்டிக் கொண்டு தவிக்கின்றேன் வந்து என்னை காப்பாற்றுங்கள் என்று,   கேட்கப்படும் வரை பஷீர் சேகுதாவூதுக்கு குமாரியின் பிரச்சனைகள் தொடர்பாக எதுவுமே தெரியாது என்பது உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். 


ஹக்கீமும் குமாரியும் சகலவிதமான தொடர்புகளிலும் இருந்தார்கள் என்பதற்கு அடிக்கடி ஹக்கீமுடன் சண்டையிட்ட  ஹக்கீமின் மனைவி ஒரு முக்கியமான  சாட்சியாகும், ஹக்கீமின் மச்சான் நயீமுல்லா ஹக்கீமும் குமாரியும் தனியறையில் இருப்பதை கண்ட சாட்சியாகும்,   பிரச்சனைகளில் இருந்து ஹக்கீமை காப்பாற்ற  பஷீர் சேகுதாவூதுடன் ரவூப் ஹசீரும்  சேர்ந்து  ஹோட்டல் தனியறையில் குமாரியை மறைத்து வைத்ததுடன், அங்கேயே ஹக்கீமை குமாரியுடன் தனிமையில் சந்திக்க வைத்து, ரசமாக  சமரசம் செய்து  வைத்து, விளக்குப் பிடித்த ரவூப் ஹசீரும் மறைக்கவும் மறுக்கவும், முடியாத ஒரு சாட்சியாகும். ஜம்மியத்துல் உலமா சபையினால்  குமாரியுடனான உறவு சம்பந்தமான விசாரணையின் போது, சகல விதமான தொடர்புகளும் அவர்களுக்குள் இருந்ததை ஹக்கீம் ஏற்றுக் கொண்டுள்ளதால் ஹக்கீமுடன் சேர்த்து  ஜம்மியத்துல் உலமா சபையில் உள்ள அனைவரும் மறுமைக்கும் சேர்த்து  உறுதிப்படுத்தப்பட்ட   சாட்சிதரர்கள் ஆகிவிட்டனர். முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் குமாரிக்கும் அவருக்கும் இருந்த உறவை ஒத்துக் கொண்டது மட்டுமல்லாமல் குமாரியுடனான  கள்ளத் தொடர்பால் அவரது மனைவியும்,  பிள்ளைகளும்  3 வருடங்களுக்கு மேல் ஹக்கீமுடன் எந்த உறவுமில்லாது  இருந்ததை கூறியுள்ளதால், இங்கு ஹக்கீம், உயர்பீட உறுப்பினர்கள், மனைவி,  பிள்ளைகள் என சகலரும் சாட்சிதாரர்களாக ஏற்கனவே உள்வாங்கப்பட்டு விட்டார்கள்,   “நம்பவைத்து ஹக்கீம் என்னை ஏமாற்றி விட்டான்” என தனது தம்பியான விஜிதவிடம் முறையிட்டு அழுத குமாரி, தம்பி விஜிதவை சாட்சியாக வைத்து விட்டுத்தான் இறந்திருக்கிறாள்.  இதற்கும் மேலாக காதலில் தோல்வி கண்டு உலகமே வெறுத்த நிலையில் ஹக்கீமுக்கும் எனக்கும் எந்த வகையான  தொடர்பு, எப்படிப்பட்ட உறவு, கணவன் மனைவியாக, குடியும் குடித்தனமுமாக வாழ்ந்த, போதையில் இருந்த ஹக்கீமால் அடி, உதை பட்ட, பிரிந்த கதைகளை குமாரி தெளிவாக  போலீஸ் முறைப்பாட்டில் கூறிவிட்டுத்தான்  போயிருக்கின்றாள். இதையும் விட இன்னுமொரு முக்கியமான சாட்சியுமுள்ளது அதை இங்கு சொல்ல எனக்கு அனுமதியில்லை. 


ஹக்கீமைப் பற்றிய இந்த விடயங்கள் ஏன் இவ்வளவு காலமும் மறைக்கப்பட்டது. ஹஸனலி, பஷீர் சேகுதாவூத் போன்றோருக்கு பதவிகளும் தேசியப்பட்டியலும் கொடுபடாத காரணத்தினால் தான் இந்த அசிங்கங்களை இவர்கள் வெளியிடுகின்றார்கள் என 16 வருடங்களின் பின் அட்டாளைச்சேனையில் பெய்த கல்லு நாட்டிய அபிவிருத்தி மழையில் ஹக்கீமாலும், ஹக்கீம் அணியினால் பல பலன்களை தினமும் அனுபவிக்கின்றவர்களாலும் நேரடியாகவும், முகப்புத்தகத்திலும், இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் ஹக்கீமுக்கு சார்பாக காரணங்களைக் கூறுவதோடு,  ஹக்கீம் பற்றிய   இத்தகவல்களை வெளியிடுகின்றவர்களை குறை காணுவது போல் கூவி, நழுவிச் சென்று ஹக்கீம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டார், அவர் நல்லவர்  என உண்மையெனும்  முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றார்கள். சமநிலையினை   பேணுகின்ற     தமிழ் மிரர்  பத்திரிகையிலும் கூட  2017 .08 . 22 திகதியன்று   அப்படியொரு செய்தியினை வாசிக்கக் கிடைத்தது. இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப் படுத்தும் வகையில், உண்மைக்கு மாற்றமாக எழுதியது மட்டுமல்லாது, குமாரியின் போலீஸ் முறைப்பாட்டினையும், குமாரியின் மரணத்தினையும்    பழைய விடயமாக திசை திருப்ப   முனைந்திருப்பது உண்மைக்கு முரணானது, ஆதாரத்தினைக் கண்டு பிடிக்கும் நோக்கில் பழைய விடயமான வசீம் தாஜூடீனின் பிணத்தினை தோண்டியது, யாழ்ப்பாணத்தில் மனித புதை குழிகள் தோண்டியது நியாயமெனின், ஆதாரங்கள் வெளிப்படையாக உள்ள குமாரியின் மரணம் தொடர்பாகவும் தோண்ட வேண்டியது நியாயமே! 


இப்போதாவது ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், அன்ஸில், நாசர் ஹாஜி, தாஹிர், போன்றோர்கள்  வெளியே வந்து உண்மைகளை சொன்னதனால்  தான் எமது சமூகம் உண்மைகளைத் தெரிந்து கொண்டது, ஆனால் இவர்கள்  எவரும் இன்று வரை வெளியே  வராது ஹக்கீமுடனேயே இருந்திருப்பின், இந்த சமூக அவலங்களும், அநியாயங்களும் மறைக்கப்பட்ட தாருஸ்ஸலாம் மர்மத்தினைப் போல் மறைக்கப்பட்டிருப்பதோடு எமது சமூகம் காலம் காலமாக கொத்தடிமைச் சமூகமாக விற்கப்பட்டிருக்கும், எதோ ஒரு வகையில் இப்பிரச்சினைகள் எமக்குத் தெரிய வந்து,  எமது சமூகம் காப்பாற்றப்பட இவ்வாறு பிரிந்து வந்தவர்களே காரணமாகி விட்டதனால் இவர்களுக்கு நன்றி கூற எமது சமூகம் கடமைப்பட்டுள்ளது. ஆனால்   இவர்களை  தனது சுயநல வேலைகளுக்கு  தடையாக, தீராத தொந்தரவாகவே பார்த்த ஹக்கீம் பல உபாயங்களை அமைத்து கட்சியை விட்டு வெளியேற்றினார். அது இன்று ஹக்கீம் நினைத்ததுக்கு மாறாக வளர்ந்து    ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், அன்ஸில், நாசர் ஹாஜி, தாஹிர், போன்றோர்கள்  முஸ்லீம் காங்கிரஸிலேயே அஸ்ரப் அணியாகி  தூய முஸ்லீம்   காங்கிரஸாகவும், ஹக்கீமும் ஹக்கீம் சார்ந்தோரும் ஹக்கீம் அணியாகி தீய முஸ்லீம் காங்கிரஸாகவும் நோக்கப்படுகிறார்கள்.


குழந்தை இல்லாதவர்களை மலடர்கள் என்றும்,  செலவு செய்யாதவனை கஞ்சன் என்றும், குருடன் என்றும், செவிடன் என்றும் ஒரு மனிதனின் தனிப்பட்ட  குறைபாடுகளையும், தெரியாமல் செய்கின்ற  தவறுகளையும் விமர்சிப்பது, சொல்லிக் கட்டுவது போன்ற  "சிர்ரு" எனப்  பொருள் படும் விடயங்கள் மறைக்கப்பட வேண்டிய விடயங்களாகும், ஆனால் ஹக்கீமினால் தெரிந்தே செய்யப்படுகின்ற தப்புக்களை,  சமூகத்தை எமது சமயத்தை அதாள பாதாளத்துக்கு இழுத்துச் செல்கின்ற தப்புக்களை, மறைக்கப்பட வேண்டிய விடயங்களாக எடுக்க முடியாது,  தட்டிக் கேட்க வேண்டிய,  தண்டனை கொடுக்க வேண்டிய குற்றமாகவே  பார்க்க வேண்டியுள்ளது.  ஹக்கீமும், ஹக்கீம் செய்பவைகள்  சரி எனவும் வாதிடுபவர்கள் நிச்சயமாக மறுமையில் பதில் சொல்ல வேண்டியேற்படும், பாவதாரியான ஹக்கீமை  விட்டு விட்டு உண்மைகள் வெளி வராதபடி  ஹக்கீமின் பிழைகளை வெளிப்படுத்துபவர்களை விமர்சித்து   தடுப்பது  எந்த வகையில் நியாயமாகும்?  உங்களது விமர்சனங்களை மக்கள் எவ்வளவு கேவலமாக பார்த்துப் பேசுகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களது குடும்பத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் மேலும் மேலும் ஹக்கீமுக்கு ஆதரவாக  கருத்துக்களை எழுதுவீர்களா? வெளி வந்தும் வராமலும், இலைமறை காயாக  இன்னும் எத்தனையோ பெண்கள் ஹக்கீமால்  வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்ற கதைகள் இன்னும்  உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? அறையில் கொடுத்த வாக்கின் படி என்னை திருமணம் செய்ய வேண்டும்  என ஹக்கீமின் வீட்டுக்கு வந்து வாகனத்தை போகவிடாது  குறுக்கே படுத்த நிஸாக்கள், குமாரிகள், செல்விகள்  எத்தனை பேர் என்று நீங்கள் கேள்விப்படவே இல்லையா? ஹக்கீமின் மனைவியிடம் கேளுங்கள் வந்தவர்கள் யாரென அவர் சொல்லுவார்.  சம்மாந்துறை கபூர் மௌலவியிடம் கேட்டால் ஹக்கீமுக்கும்   கபூர் மௌலவியின் மனைவிக்கும் இடையில்  எப்படிப்பட்ட தொடர்பால் விவாகரத்து வரை சென்றது என்பதை கபூர் மௌலவி விளக்கமாக சொல்வார். ஹக்கீமின் பொய், மது,மாது, , கொலை, மோசடி என பல்வேறு குற்றங்களுக்கு மட்டையடி, முதல் கலெறிந்து கொல்லுதல் வரை சகல தண்டனைகளும் அளிக்கப்படவேண்டிய ஒருவரை தலைவன் என்று சொல்ல எமக்கு  வெட்கமில்லையா? ஹக்கீமுக்கு சாதகமாக இன்னும்  வக்காலத்து வாங்கும் உங்களுக்கு உடம்பு கூசவில்லையா?  

அமீர் மௌலானா  

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions