Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஐ.எஸ். கோட்டையான ரக்கா மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்
Posted By Super User on 8/26/2017, | வெளிநாடு | Source: Athavan
ஐ.எஸ். கோட்டையான ரக்கா மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

ஐ.எஸ். இன் கோட்டையாக திகழும் மோதல் பிரதேசமான சிரியாவின் ரக்கா பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் முகமாக, குறித்த பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகளை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

ரக்கா பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அங்கு சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரத்திற்குள் மாத்திரம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் சுமார் 250 விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறாக கடந்த ஜுன் மாதம் முதல் ரக்காவில் மோதல் நீடித்து வருகின்ற நிலையில், இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சிரியாவிற்கான ஐ.நா. பொதுமனிதாபிமான ஆலோசகர் கூறுகையில், ”மோதல்களில் சிக்கித்தவிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரக்காவை மீட்க போராடும் கூட்டணி படையினர் மற்றும் மனிதாபிமான பணிக்குழு உறுப்பினர்கள் தங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என ஐ.நா. சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதேவேளை, மேற்காசியாவிலுள்ள இயூபிரட்டீஸ் ஆற்றினூடாக பயணிக்கும் படகுகள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது. மக்கள் வெளியேறும்போது விமான தாக்குதல்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அதேவேளை, மோதல்களிலிருந்து தப்பித்து வெளியேறும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்கமுடியாதவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ். கோட்டையான ரக்கா மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions