Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
​ரஷ்யா மீது மீண்டும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா..!
Posted By Super User on 8/3/2017, | வெளிநாடு | Source: NS7
​ரஷ்யா மீது மீண்டும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா..!

ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிக அளவு இருந்ததற்காகவும், மேலும் பல்வேறு காரணங்களுக்காகவும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர விரும்பினாலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவிற்கு அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை ஆலோசகரான கெல்லியன் கான்வே உறுதி செய்துள்ளார். 

​ரஷ்யா மீது மீண்டும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா..!
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions