Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்
Posted By Super User on 7/28/2017, | சினிமா | Source: DT
கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நடிகர் கமல்ஹாசன் முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்கள், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ‘கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று விமர்சனம் செய்தார்.கமல்ஹாசனை தி.மு.க தூண்டி விடுகிறது என்றும்   தி.மு.க நடத்திய ஊழல்களை அவர் ஏன் தட்டி கேட்கவில்லை எனவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்து, அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அந்தந்த துறை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு பரபரப்பு வேண்டு கோள் விடுத்தார். பின்னர் அமைச்சர்களுடைய இணையதள முகவரிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டன.  கமல்ஹாசன் அரசுக்கு எதிராக தினமும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிடுவதும், அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதும் தொடர்ந்து வருகிறது.

கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார் கமல்ஹாசன்.

சமீபத்தில் எல்லாத்துறையிலும் ஊழல் உள்ளது என இவர் கூறியதற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions