Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
எனக்கும் கடிக்குமா அம்மா டெங்கு நுளம்பு?
Posted By Super User on 19/07/2017 | கவிதைகள் | Source: Editor Sanakyam
எனக்கும் கடிக்குமா அம்மா டெங்கு நுளம்பு?

எனக்கும் கடிக்குமா அம்மா
டெங்கு நுளம்பு?
-------------------------

ஸ்கூல் சட்டையை நீளமா 
உடுத்தவாமென்று 
பிரின்சிபெல் சொன்னவர் -
எனக்கும்  கடிக்குமா அம்மா
டெங்கு நுளம்பு?...

ரெண்டு வருசம் முன்னாடி தைச்ச சட்ட
ஐந்தாம் தரம் தாண்டி இப்போ
ஏழாம் தரத்திலும் அந்த
ஓரே சட்டை...
வர.. வர..
கட்டையாகிட்டே போகுது
இருக்கிறதும் ஒரே சட்டை
நீளமா இழுக்க முடியுமா அம்மா அத?

காலையில பட்டினியா போய்
இண்டவெல்லுக்கு முன்னாடி
பசி வந்து மயக்கத்தில
பக்கத்து தோட்டத்தில
மா பிஞ்சு பிச்சதில
கறையாப் போச்சுதின்னு
நீ போட்டு தேய்ச்சதில
கீழ் வாட்டி கிழிச்சு போச்சு...
ஊசி போட்டு தைச்சதில
நூலேறி கோலமாச்சி...

பசிச்சா வாங்கிச் சாப்பிடுன்னு
நீ தரும் பத்து ரூபாயில
பணிஸ்கூட தரமாட்டான்
வெரலிக்கா... லொவிக்கான்னு
வாங்கி போட்டதில
பொக்கற்றுக்கு மேலால
கறை பட்டு நாளாச்சு...
நீ கண்டு தேய்ச்சிட்டா
கிழிச்சே போயிடும்னு
சோக் பீசால 
வெள்ளையடிச்சு
வைச்சிருக்கேன்...

கட்டையா இன்னொரு சட்டை
தைச்சித் தரவே
ரெண்டு வருசமா முடியலியே
நீட்டமா நீ எப்ப 
தைச்சித் தரப்போற?...

கிடைச்ச வெள்ளத்துணிகள
விற்காம இருந்தா
நோயாள படுத்த நீ
பாயோட போயிரப்ப...

எனக்கும் கடிக்குமா அம்மா
டெங்கு நுளம்பு?...

கட்ட சட்டையோட
காலையில நான் போறேன்
நீட்டமாதான் உடுத்தனும்னு
கட்டாயப்படுத்தினா
இடையில நான் வாறேன்
உன்ட
வெள்ளைச் சேலையில ஒரு துண்ட
கிழிச்சி குடு அம்மா!

இருக்கிறதே ஒன்னு தானேன்னு
இல்லன்னு சொல்லாத
நுளம்பு கடிக்காம
ஸ்கூல் போகனும்னா
வேற வழியில்ல அம்மா?

- இப்னு அஸூமத்

எனக்கும் கடிக்குமா அம்மா டெங்கு நுளம்பு?
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions