Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
பாகிஸ்தானுக்கு இந்தியா வெற்றியைப் பரிசாக அளித்தது- சேவாகின் முன்னாள் பயிற்சியாளர்
Posted By Super User on 7/16/2017, | விளையாட்டு | Source: Athavan
பாகிஸ்தானுக்கு இந்தியா வெற்றியைப் பரிசாக அளித்தது- சேவாகின் முன்னாள் பயிற்சியாளர்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிபோட்டியில், பாகிஸ்தானுக்கு இந்தியா வெற்றியைப் பரிசளித்ததாக இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாகின் முன்னாள் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா கடுமையாக சாடியுள்ளார்.

ஆங்கில கிரிக்கெட் ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்குமாறு சச்சின் கோரிய போதே அனைத்தும் முடிந்து விட்டது. சச்சின் ஒரு மிகப்பெரிய ஆகிருதி அவருக்கு முன்னால் யாரும் நிற்க முடியாது. கங்குலிக்கும் லஷ்மணுக்கு இதில் லேசாக அதிருப்தி இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பயிற்சியாளர் தேர்வு நடைமுறை நியாயமற்றதாக உள்ளது.

சாஸ்திரியிடம் விண்ணப்பிக்கக் கோரியது சச்சின், இதுவே சாஸ்திரிக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்படுவதற்கான உத்தரவாதமாக அமைந்து விட்டது. சச்சினுக்கு சாஸ்திரி மீது நேர்மறையான அபிப்ராயம் இருந்துள்ளது. எனக்கு அனில் கும்ப்ளே மீது நிரம்ப மரியாதை உள்ளது. ஆனால் உண்மையிலேயே அணிக்கு பயிற்சி கொடுத்தவர் கடைசியில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒன்றுமே செய்யாமல் வீரர்கள் கிழித்த கோட்டை தாண்டாதவர்களின் பணிக்காலம் நீடிக்கும்! தங்களைக் கசக்கிப் பிழியும் பயிற்சியாளரை வீரர்கள் விரும்புவதில்லை.

கண்டிப்பாக விராட் கோஹ்லி சேவாகைக் காட்டிலும் சாஸ்திரியை முன்னிறுத்துவதற்கே வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் சேவாக் அணிக்காக பணியாற்றுவார், நிச்சயம் வீரர்கள் தங்கள் போக்கில் செல்ல சேவாக் அனுமதிக்க மாட்டார். வீரர்களிடம் காது கொடுத்துக் கேட்பார்” கூறினார்.

பாகிஸ்தானுக்கு இந்தியா வெற்றியைப் பரிசாக அளித்தது- சேவாகின் முன்னாள் பயிற்சியாளர்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions