Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஹகீம் சமரசத்திற்குப் போவதற்கு முன்னிரவு கூறியதென்ன?
Posted By Super User on 7/12/2017, | நேர்காணல் | Source: Editor Sanakyam
ஹகீம் சமரசத்திற்குப் போவதற்கு முன்னிரவு கூறியதென்ன?

கிழக்கின் எழுச்சியின் அஸ்ஸுஹுர் சேகு இஸ்ஸடீனுடனான நேர்காணலில் இருந்து.

ஹஸனலி அவர்களுடன் முரண்பட்டிருந்த ஹகீம் அவர்கள், தேர்தல் செயலகத்தில் சமரசத்திற்குப் போவதற்கு முன்னிரவு தனிமையில் ஹஸனலி அவர்களை சந்தித்தபோது இரண்டு விடயங்களை பிரதானமாக கேட்டிருந்தார். (பின்னர் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுது, அழகாக அல்வா கொடுத்துவிட்டார்)

1. நீங்கள் கிழக்கின் எழுச்சியை உங்கள் உறவினர்களைக் கொண்டு எமக்கெதிராக தொடங்கியுள்ளீர்கள். (கி/எ ஆரம்பிக்கப்பட்டபோது ஹஸனலி அவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை)

2. முஸ்லிம் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

ஆழமாக சிந்தித்தால் ஹகீம் அவர்கள் அஞ்சுவது எதற்கென்பது புரியும்.

மு.கா தலைமை கிழக்கிற்குக் கிட்டாமல் போனதன் பின்னர், கிழக்கு வடக்கின் முற்லிம் தலைமைகளை ஓரணியில் திரட்ட எத்தனை இரவுகள் தூக்கமின்றி உழைத்தோம் என்பதை இறைவன் அறிவான்.

அமீர் வபா பாரூக் அவர்கள் பாரிசவாதம் பாதிக்கப்பட்ட உடலின் வேதனைகளை பொறுத்துக்கொண்டு பல இரவுகள் விழித்திருந்து அம்பாறை முதல் திருகோணமலை வரை எம்முடன் பயணம் செய்து எமது முற்சிகள் வெற்றியளிக்க துணை நின்றார். இறைவன் அவரின் தன்னலமற்ற முயற்சிக்கு அவருக்கு நல்லருள்பாலிக்க வேண்டும்.

ஹசனலி அவர்களும் பஷீர் அவர்களும் ஹகீம் அவர்களுடன் பிணங்கிக்கொண்ட சமயத்தில், கூட்டமைப்பிற்காக ஒற்றுமைப்படவேண்டும் என்று கருதிய தலைவர்களுடன் இவர்களுக்குச் சுமுகமான உறவு இருந்திருக்கவில்லை.

மாஷா அல்லாஹ் அவர்கள் பரஸ்பரம் கருத்துப்பரிமாறிக் கொள்ளும்படியான சூழ்நிலையை உருவாக்குவதில் இறைவனின் அருள் கிழக்கின் எழுச்சிக்குக் கிட்டியது.

இன்னுமொரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி முஸ்லிம்களை, மேலும் பிரிவினைக்குள்ளாக்கலாகாது என்ற எமது எண்ணத்தின் தொடர்ச்சியாக பிரிந்துள்ள சக்திகளை ஒன்றாக்கிவிடுவது கைகூடியுள்ளது.

உடன்பாடுகளை நாம் ஓரணியில் திரட்டவில்லை. முரண்பாடுகளுக்கிடையில் ஒரு உடன்பாட்டை சமூகநலனுக்காக எட்டச்செய்வதே எமது எண்ணம். இதற்குத் தலைவர்களும் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய முன்வரவேண்டியுள்ளது. அதுமாத்திரமின்றி கூட்டமைப்பினால் பீதியடைந்திருக்கும்,கூட்டத்தின் சதிகளிலும் நயவஞ்சகத்தனத்திலும் சிக்கிவிடாமலிருப்பதும் முக்கியமானதாகும்.

தற்போது முஸ்லிம் தலைமைகளின் ஒற்றுமைப்படுதலுடன் கிழக்கின் எழுச்சி புதுப்பரிணாமம் எடுத்துள்ளதை அறிய அரசறிவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றிருக்க வேண்டியதில்லை.

ஹகீம் சமரசத்திற்குப் போவதற்கு முன்னிரவு கூறியதென்ன?
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions