Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே
Posted By Super User on 7/1/2017, | விளையாட்டு | Source: DT
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே

இலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே அணி ஐந்து ஒருநாள் மட்டும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அவ்வணியின் தொடக்கவீரர் டிக்வெல்லா பத்து ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். குணதிலகா, குஷால் மெண்டிஸ், தரங்கா மூவரும் அரைசதம் அடித்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களை குவித்தது. தரங்கா 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தொடர்ந்து 317 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிலும் தொடக்க ஆட்டகாரர் மஸகாட்ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சாலோமோன் மைர்- சீன் வில்லியம்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தனர். மைர் 112 ரன்களும் வில்லியம்ஸ் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஷா-மெல்கோம் வாலர் ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 102 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தது. ரஷா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களையும், வாலர் 40 ரன்களையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி வெற்றி இலக்கை 47.4 ஓவரில் கடந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions