Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஐ.சி.சி.-யின் புதிய யாப்பு நிறைவேற்றம்
Posted By Super User on 6/24/2017, | விளையாட்டு | Source: Athavan
ஐ.சி.சி.-யின் புதிய யாப்பு நிறைவேற்றம்

சர்வதேச கிரிக்கட் சபையின் புதிய யாப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் சசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.


லண்டனில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, புதிய யாப்பினை சர்வதேச கிரிக்கெட் சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய யாப்பிற்கு இலங்கை கிரிக்கெட் சபையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதிலும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதிய யாப்பு ஏகமனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


சர்வதேச கிரிக்கட் சபையின் புதிய யாப்பு விதிகள் உலக கிரிக்கெட் ஆளுகை சபையின் இயல்பான பண்புகளை மாற்றுவதுடன் அதன் உறுப்பு நாடுகளின் சுயாதீனத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அமையும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி.-யின் புதிய யாப்பு நிறைவேற்றம்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions