Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசராக மொஹமட் பின் சல்மான் நியமனம்
Posted By Super User on 6/21/2017, | வெளிநாடு | Source: Athavan
சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசராக மொஹமட் பின் சல்மான் நியமனம்

சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நஜீப் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் இளவரசர் மொஹமட் பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இராஜ்ஜியத்தின் அடுத்த ஆட்சியாளராக இளவரசர் மொஹமட் பின் சல்மான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
சவுதி அரசரும் இளவரசர் மொஹமட் பின் சல்மானின் தந்தையுமான சல்மான் பின் அப்துலாஸிஸ் மேற்படி நியமனத்தை வழங்கியுள்ளார்.


அத்துடன் துணைப்பிரமராகவும் நியமிக்கப்பட்டுள்ள இளவரசர் மொஹமட் பின் சல்மான் அவரது பாதுகாப்பு மற்றும் பிற அமைச்சுப் பொறுப்புக்களையும் தக்கவைத்துள்ளதாக சவுதி அரேபிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசரின் பதவி உயர்வு இராஜ்ஜியத்தின் கௌரவக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் மொஹமட் பின் நஜீப் பல ஆண்டுகளாக இராஜ்ஜியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தலைவராக பணியாற்றியுள்ளார். அதேவேளை மொஹமட் பின் சல்மான் துணை இளவரசர் என்ற வகையில் யேமனில் சவுதி அரேபியா நடத்தும் போரிற்கு பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசராக மொஹமட் பின் சல்மான் நியமனம்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions