Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மழைப்பாட்டு
Posted By Rifqi Ali on 6/7/2017, | இலக்கியம் | Source: Editor Sanakyam
மழைப்பாட்டு

மழைப்பாட்டு

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான் இந்த உலகிலுள்ள அழகான இரண்டு விடயங்களாகும் என்று எங்கோ வாசித்ததாக ஞாபகமிருக்கிறது. நேசிப்பதைத் தாண்டியும் நேசிக்கப்படுகிறோம் என்பது வர்ணிக்க இயலாத குதூகலத்தை மனதில் பிறப்பிக்கின்றது. 

அதீத ஈடுபாடின்றித்தான் ஆசிரிய பயிலுனராக எனது பயிற்சிக்காலங்கள் ஆரம்பமாகின அதற்காக நியாயமில்லாத காரணங்களையும் வகுத்து வைத்திருந்தேன் என்பதெல்லாம் பழங்கதை.
இப்போதெல்லாம் ஆசிரியனாக என்னை ஆக்குவித்த அல்லாஹ்வுக்கு நிறையவே நன்றிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அவன் எப்போதும் அப்படித்தான் எதிர்பாராத புறங்களிலிருந்து நலவுகளை நாடிக்கொண்டேயிருப்பான்.

கல்லூரியில் இருந்த காலங்களில் மூன்று முறை கற்பித்தல் பயிற்சிகளுக்கு வெவ்வேறு பாடசாலைகளுக்குச் சென்றிருந்தேன்.மூன்று  மழைக் காலங்களிலும் நிறையவே மலர்கள் எனக்காக வழங்கப்பட்டன.

என்னுடைய பாடசாலை நாட்களிலும் இப்போது போலவே கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் என்றால் நிறையவே வரவேற்பிருக்கும்.
"கொலிச் டீச்சர் பாட்டுச் செல்லித் தருவா,விளையாடக் கூட்டிப் போவா...." என்றெல்லாம் நிறைய எதிர்பார்ப்புகளும் இருந்ததுண்டு.

மாணவனப் பருவத்தை தாண்டி முதன்முதலாக ஆசிரியராகப் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னாயத்தமாக எல்லா வேலைகளையும் முடித்த பின்னரும் அந்த இரவில் தூக்கமே வரவில்லை.
" வகுப்புல போய் முதலாவதாக என்ன பேசுவது, எத்தனை பிள்ளைகள் இருக்கும்,என்னென்ன பாட்டுச் சொல்லிக் கொடுக்குற...." 
இத்தனை கேள்விகளுக்கு நடுவில் எப்படித் தூக்கம் வரும்??

எல்லாவற்றையும் தாண்டி வகுப்பறைக்கு பிரவேசித்ததும் முதலாவதாக சொல்லிக் கொடுத்த கதையும் இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. 
பாடசாலை வளர்த்துவிட்ட தைரியமும் பேச்சாற்றலும்  நிறைய சவால்களை இலகுவாகக் கடக்க துணைபுரிகின்றன.. 

ஆரம்பமாக எனது வகுப்பறைகள் 23 மாணவர்கள் இருந்தார்கள் ஒவ்வொருவராக பெயரைக் கேட்கும் போது 5,6 பெயர்கள் என்னைப் பாதித்த பெயர்களாகவே இருந்தன. இறுதியில் எனது பெயரை அறிமுகம் செய்யும் போதே ஒரு மாணவன்
" நிஸ்றி விசிறி " என்றான் எல்லோரும் சிரித்தார்கள் நானும்தான்.

அந்த வகுப்பறையில் 10 நாட்கள் வாழ்ந்தேன் 23 பேர் என்னுடன் வாழ்ந்தார்கள். எனக்கென வாய்த்த  முதலாவது மாணவர்கள் அவர்கள்..அங்கு மாநிறத்தில் இரண்டு மூன்று பேர் முண்டைக் கண்ணோடு ஒருத்தி என்றெல்லாம் அழகிகளும் அழகர்களும் பச்சை நிறக் கழுத்துப் பட்டியுடன் வலம் வந்தார்கள்.

"சேர் என்ற வார்த்தையின் உன்னதத்தை நாட்கள் அவை, முதன் நாள் அதிபர் என்னை சேர் என்று அழைத்தார் ஆனால் நான் திரும்பவில்லை பிறகு சக பயலுனர் சொல்லித்தான் திரும்பினேன்.
என்னை யாரும் அப்படி யாரும் அழைத்ததில்லையே!
 எல்லாமே புதிதாக இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பே நகமெல்லாம் வெட்டி சுத்தமாக்கி விட்டேன் ஆனாலும் இடையிடையே நகத்தைப் பார்த்தேன் ஊத்தைள் இருந்தால் மாணவர்களுக்கு பிழையான உதாரணமாக அது இருந்து விடுமென பயந்து கொண்டிருந்தேன்.

மேற்பார்வை விரிவுரையாளர் வருகை தந்து சத்ததை குறைத்து கற்பிக்குமாறு சொன்னது மிகப் பெரிய தைரியத்தையும் உட்சாகத்தையும் தந்தது.

இரண்டு விளையாட்டு மூன்று பாடல்கள் கதை கூறலோடு முதலாவது நாள் முடிவுற்றாலும் சாயந்தமருது கதை கொஞ்சம் புரியமாமல்தான் இருந்தது.

விடுதி வந்ததும் எல்லோரும் என்னை சேர் என்றழைத்த  மகிழ்ச்சியை உம்மாவிடம் சொல்லி மகிழ்ந்தேன். 
என் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருக்கும் ஜீவன் அவர்தானே.

ஞாபகத்தில் மிதந்து தூக்கமிழந்த அந்த இரவில் எத்தனையோ தடவை ஒலித்துக் கொண்டிருந்தது " சேர் சேர்" என்று..

அட்டாளை நிஸ்ரி

மழைப்பாட்டு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions