Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
உலமாக்களே அரசியல தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்
Posted By Rifqi Ali on 4/29/2017, | உள்நாடு | Source: Editor Sanakyam
உலமாக்களே அரசியல தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்

 

பள்ளிவாசலில் ஒலி பெருக்கியூடாக அதான் அழைப்புக்களை அடக்கும் போதும் பொறுமையாய் இருந்து கோளைகளாய் ஆனோம்.

முகம் மூடுவது சரியா பிழையா என்பதை எமது சங்கைக்குரிய உலமாக்கள் விவாத்தித்துக்கொண்டு இருக்கும் போது பர்தாவை நீக்குவதற்காக இறை மறுப்பாளர்களின்  சர்வதேச சதி வலைக்குள் சிக்கி சீரழியும் அரசியல் தலைமைகளுடன் கைலாகு கொடுக்கும்  நம் நாட்டு தலைமைகளின் பலயீனங்களை அடையாளம் கண்டு நம் நாட்டுக்குள்ளும் நமது பெண்களின் மானம் மரியாதைகளிளும் கலங்கம் உண்டாக்க எவரும் முன்வரக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையால் ஆலோசனை செய்து உலகலாவிய ரீதியில் எமது பெண்களை நிர்வாணமாக்கும் எந்த முயற்சியையும் நாம் பார்த்துக்கொணிருக்க மாட்டோம் என்ற பகிரங்க எச்சரிக்கையை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஷாபி மத்ஹப்பில் காட்டப்பட்டுள்ள குர் ஆன் ஹதீஸின் ஆதாரங்களை ஏற்று பர்தாவை வாஜிபாக பிரகடணப்படுத்தியது.

 என்னைப்பொறுத்தவரை இது ஒரு யுத்தத்துக்கான முற்பாதுகாப்புப் பிரகடணம்.

ஆத்மீகத் தெளிவில்லாத நவீன நாத்திக வாதிகளின் போலி பெண்ணியக்கோசங்களையும் இஸ்லாத்தை அழிக்க கங்கணம் கட்டிச் செயல்படும் கூலிக்கூட்டத்துக்கும் எதிரான ஒரு யுத்தப்பிரடணமாகவே இதை நான் காண்கிறேன்.

ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதன் காரணத்தாலேயே அழ்ழாஹ்வின் தூதர் அவர்களின் கண்ணியத்துக்குரிய தோழர்கள் வீறுகொண்டெழுந்து முதன் முதலில்  வாளேந்தினார்கள்

பெண்களை காமப்பண்டமாக பார்க்கும் கலாச்சாரம் மேலோங்கியுள்ள காலத்தில் மறைந்து இருப்பதே பெண்களுக்கு அழகு என்பதை ஆணித்தரமாய் கூறியதனூடாக ஜம் இய்யதுல் உலமா சலசலப்புகளுக்கு அஞ்சாத ஆழ்ந்த அறிவும் துணிவும் கொண்ட அமைப்பு என்பதை நிரூபித்துள்ளதுபோல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரத்திலும் காத்திரமான பங்களிப்பை செய்யக்கூடிய தலைமைத்துவ சபையாக தம்மை வடிவமைத்து செயல்பட வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.

ஜம் இய்யதுல் உலமா; இலங்கை முஸ்லிம்கள் விவகாரத்தில் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நடக்க சித்தமாயுள்ளேன்

அது ஒரு யுத்தமாயினும் சரியே!

தனது நுபுவ்வத்தின் வாரிசுகளென நபி ஸல்லழ்ழாஹ் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட உலமாக்களை மிஞ்சிய ஞானம் எமக்கிருப்பதாய் உரிமை கோர நாம் தயாரில்லை!
அவ்வாறு உரிமை கோருவோரை நாம் பகிரங்கமாய் புறக்கணிப்போம். 

கேவலமான பாவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்போரை முஸ்லிம் அரசியலிருந்து ஒதுக்குமாறு வேண்டி முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும் வழி நடாத்த வேண்டிய கடப்பாடு ஜம் இய்யதுல் உலமாவுக்கு உண்டு

ஆண்மீகமும் அரசியலும் இரண்டறக்கலந்துள்ள இஸ்லாத்தின் அரசியல் தலைமைக்கும் மிகப்பொருத்தமானவர்கள் அழ்ழாஹ்வை அஞ்சும் சங்கையான உலமாக்களே!

தேசிய தலைமைத்துவ சபையாக உலமா சபையே செயல்பட வேண்டும் என்பது எமது பணிவான எதிர்பார்ப்பாகும்.

உலமா சபையின் வழிகாட்டலுக்கு இணங்கவே எந்தக்கட்சியை சேர்ந்த எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் செயல்பட வேண்டும் என்பது எழுதா நியதியாக பின்பற்றப்படவேண்டும்.

ஆகவே, வித்தியாசமான சிந்தனைப்பள்ளிகளைக்கொண்ட பன்முக ஆளுமைகளை உள்ளடக்கிய ஜம் இய்யதுல் உலமாவைவிட தலைமைத்துவத்துக்கு  தகுதியானோர் எவரும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு

-வபா பாறுக்-

உலமாக்களே அரசியல தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions