Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ம்; முஸ்லிம்களே கார‌ண‌ம்
Posted By Rifqi Ali on 4/16/2017, | உள்நாடு | Source: Editor Sanakyam
முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ம்;    முஸ்லிம்களே கார‌ண‌ம்


1. முஸ்லிம் காங்கிர‌சை வ‌ட‌ கிழ‌க்குக்கு வெளியே கொண்டு சென்ற‌மை.
2. முஸ்லிம் காங்கிர‌சின் ச‌ந்த‌ர்ப்ப‌ அர‌சிய‌ல். தேர்த‌ல்க‌ளில் ஒரு க‌ட்சியை எதிர்த்து விட்டு அந்த‌க்க‌ட்சி ஆட்சிக்கு வ‌ந்த‌தும் ஒட்டிக்கொண்டு அமைச்சு ப‌த‌வியை பெறுவ‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ நாங்க‌ள் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ஆட்சியை பிடிக்கிறோம். இந்த‌ முஸ்லிம்க‌ள் தேர்த‌லில் எம‌க்கு எதிராக‌ நின்று விட்டு இப்போது சுக‌ம் அனுப‌விக்கிறார்க‌ள் என்ற‌ எரிச்ச‌ல் பெரும்பாலான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளிட‌ம் வேரூன்றிய‌து. இது ப‌ற்றி அவ‌ர்க‌ள் சிங்க‌ள ஊட‌க‌ங்க‌ளிலும் பாராளும‌ன்ற‌த்திலும் ப‌கிர‌ங்க‌மாக‌வே குற்ற‌ம் சாட்டுவ‌தில் நியாய‌ம் உண்டு என்ப‌தை சிங்க‌ள‌ ச‌மூக‌ம் ஏற்று வ‌ருகிற‌து. முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ள் காசு ப‌ண‌த்துக்காக‌ ம‌த‌ம் மாற‌வும் த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளால் நாடு கெட்டு குட்டிச்சுவ‌ராகிற‌து என‌ சிங்க‌ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் சொல்வ‌தை மு. கா ம‌ட்டும‌ல்ல‌ ஏனைய‌ சில‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளும் நிரூபித்து வ‌ருகின்ற‌ன‌ர். 
3. முஸ்லிம் வியாபாரிக‌ள். ஒரு  முஸ்லிம் வியாபாரி என்றால் அவ‌ரிட‌ம் நீதி, நியாய‌ம், நேர்மை இருக்கும் என்றே இந்த‌ நாட்டு ம‌க்க‌ள் க‌ண்டு வ‌ந்துள்ள‌ன‌ர். ஆனால் அண்மையை 20 அல்ல‌து 30 வ‌ருட‌ கால‌ எல்லைக்குள் இவை அனைத்தும் முஸ்லிம்க‌ளிட‌ம் த‌லைகீழாகி விட்ட‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ ச‌மூக‌ம் க‌ண்டு வ‌ருகிற‌து. வியாபார‌த்தில் நேர்மை இன்மை, செக் மோச‌டி, பொய், புர‌ட்டு, நியாய‌ம‌ற்ற‌ பொருள் விலை என‌ ப‌ல‌ அநீதிக‌ளை ப‌ல‌ முஸ்லிம் வியாபாரிக‌ளிட‌ம் காண‌க்கிடைக்கிற‌து. அத்துட‌ன் ப‌ண‌த்துக்காக‌ பாதாள‌ உல‌க‌ கோஷ்டி ந‌ட‌த்துவ‌து, ப‌ண‌த்துக்காக‌ ம‌னித‌னை கொல்வ‌து என்ப‌வை முஸ்லிம்க‌ளிட‌ம் அதிக‌ரித்த‌ன‌. சில‌ முஸ்லிம் பாதாள‌ கோஷ்டிக‌ளால் ப‌ல‌ சிங்க‌ள‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் இவ‌ற்றை த‌ம‌து பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளிட‌ம் முறையிட்டுள்ள‌ன‌ர். இத‌னால் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் க‌ருத்துக்க‌ள் இன்று பார‌தூர‌மாகி விட்ட‌ன‌. 
4. முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள். பொதுவாக‌ சிங்க‌ள‌ பெண்க‌ள் மிக‌வு மிருதுவான‌வ‌ர்க‌ள். க‌டு க‌டுப்பு இல்லாத‌வ‌ர்க‌ள். யாருட‌னும் எளிதில் ப‌ழ‌குவார்க‌ள். அத்துட‌ன் முஸ்லிம்க‌ள் மீது ந‌ல்ல‌பிப்பிராய‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். முஸ்லிம்க‌ள் என்றால் உண்மையான‌வ‌ர்க‌ள், வ‌ஞ்ச‌க‌ம் செய்ய‌மாட்டார்க‌ள், குடிக்க‌ மாட்டார்க‌ள் என்ற‌ அபிப்பிராய‌ம் உண்டு. இவை அனைத்தையும் ந‌ம‌து இளைஞ‌ர்க‌ள் உடைத்து தள்ளிய‌துட‌ன் சிங்க‌ள‌ யுவ‌திக‌ளை த‌ம‌து இச்சைக்கு ப‌லியாக்கும் பொருளாக‌ மாற்றிய‌மை சிங்க‌ள‌ வாலிப‌ரிடையே க‌டுமையான‌ ஆத்திர‌த்தை உண்டாக்கிய‌து. முஸ்லிம் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் கூட‌ இத்த‌கைய‌ மோச‌மான‌ செய‌லை செய்த‌ன‌ர். காத‌லித்து கைவிடுவ‌து, க‌லியாண‌ம் முடித்த‌ பின் குடும்ப‌த்தோடு கொடுமைப்ப‌டுத்துவ‌து, விர‌ட்டி விடுவ‌து போன்ற‌ கொடுமைக‌ள் அதிக‌மாகின‌. இவை சிங்க‌ள‌ இளைஞ‌ர்க‌ளுக்கு முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள் மீது ஆத்திர‌த்தை ஏற்ப‌டுத்தியுள்ள‌ன‌.
5. முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் உள்ள‌ ம‌த‌ரீதியிலான‌ க‌ருத்து வேறுபாடுள்ள‌ விட‌ய‌ங்க‌ள் நீதிம‌ன்ற‌ம் போவ‌து, அந்த‌ அமைப்புக்க‌ள் ப‌ற்றி சில‌ முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளால் சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளிட‌ம் கோள் மூட்டிய‌து என்ப‌ன‌ முஸ்லிம்க‌ள் ப‌ற்றிய‌ ப‌ய‌ங்க‌ர‌ தோற்ற‌த்தை தோற்றுவித்த‌து.

இப்ப‌டியான‌ விட‌ய‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ 30 வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ப்ப‌த‌ன் கார‌ண‌மாக‌ யுத்த‌ம் முடிவுற்ற‌பின் சிங்க‌ள‌ இன‌வாத‌ம் முஸ்லிம்க‌ளின் ப‌க்க‌ம் திரும்பிய‌து.  ஊட‌க‌ங்க‌ளும் இவ‌ற்றை பெரிது ப‌டுத்தின. 

ஆக‌வே முஸ்லிம்க‌ளின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் திருத்த‌ம் தேவை. அத்துட‌ன் தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் என்ப‌து சிங்க‌ள‌ ம‌க்க‌ளுட‌ன் ச‌மாதான‌ ம‌ற்றும் இணைந்த‌ அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கை தேவை. எந்த‌க்க‌ட்சிக்கு அல்ல‌து எந்த‌ அர‌சிய‌ல்வாதிக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளிட‌ம் செல்வாக்கு உள்ள‌தோ அத‌னை ச‌ரியாக‌ நாடிபிடித்து அவ‌ர்க‌ளுட‌ன் இசைந்த‌ அர‌சிய‌ல் முன்னெடுப்புக்க‌ள் தேவை. இல்லாவிடில் முஸ்லிம்க‌ள் மீதான‌ வெறுப்பு மிக‌ப்பெரும் உச்ச‌த்தை அடைய‌லாம் என்ப‌தை எச்ச‌ரிக்கிறோம்.
-மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
உல‌மா க‌ட்சி

முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ சிங்க‌ள‌ இன‌வாத‌ம்;    முஸ்லிம்களே கார‌ண‌ம்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions