Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
நஸீஹா முஹைதீன் கவிதை
Posted By Rifqi Ali on 4/12/2017, | கவிதைகள் | Source: Editor Sanakyam
நஸீஹா முஹைதீன் கவிதை

முன்னரை விட
நிலம் ஊறிக் கிடக்கும் 
இரத்தங்களில் பிடிப்பு இருப்பதில்லை

சிரியா அத்தனை தூரமில்லை
மிக அண்மையுமில்லை

ஒரு குழந்தை 
இரண்டு குழந்தையாய் 
ஒட்டுமொத்தமாக 
அவர்கள் தூங்குகிறார்கள்

நான் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறேன்
அவரசகால ஆறுதலின் 
சாயலில் அது இருக்கிறது

அய்லானையும் 
தூங்கும் சிறிய கடல் மீனாகவே 
கற்பனை செய்கிறேன்
ஆனால் மீன்கள் கண்களை மூடிக்கொள்வதில்லை

ஒரு பால்கோப்பியின் சுவை படிந்த 
சின்ன அதரங்களின் 
வெடிகுண்டு வாசனையை 
மணல்  எப்போதோ
உறிஞ்சிக் கொண்டது

ஒம்ரான் விழித்தபடியே
புழுதி மணல் புதைந்த காயங்களைத்  தடவிக் கொண்டிருந்தான்

பழங்காலத்து கதைகளில் வரும்
மந்திரக்குச்சி போல
நாளெல்லாம் ஆசைகளை 
யோசிக்க முடியும்

ஆனாலும் எவனோ ஒருவனை 
திட்டித் தீர்க்க வேண்டும் 
எண்ணெய் இல்லாத தலை
செருப்பில்லாத கால்கள் 
அவன் அமெரிக்க வம்சாவளியாக இருக்கலாம்

கெபிடலிஸம்,சர்வாதிகாரம்
பிகைண்ட்வூடென 
மாபெரும் புரட்சிக்கிறுக்கர்களின் நடுவே

கடவுச்சீட்டு இல்லாத என்னால் 
இசைகளையே எழுப்ப முடிகிறது

ஒரு பெரும் நூல் 
ஒரு மனிதக் காது
ஒரு முத்திரைக் கடதாசி 
ஒரு துளி மன்னிப்பு

ஒன்றையொன்று முட்டிமோதி 
சிதை மூட்டும் நேரத்திலாவது 
ஒரு அய்லான் வாழவிட்டிருக்கலாம்....

நஸீஹா முஹைதீன்

நஸீஹா முஹைதீன் கவிதை
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions