Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
குற்றப்பணம் கைமாறும் நியதிச்சட்டம் வட.மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டது
Posted By Super User on 06/04/2017 | உள்நாடு | Source: Athavan
குற்றப்பணம் கைமாறும் நியதிச்சட்டம் வட.மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டது

நீதிமன்றங்களினால் அறவிடப்படும் குற்றப்பணம் மற்றும் தண்டப்பணத்தை உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மாற்றும் ஏற்பாடுகளைச் செய்வதற்கான நியதிச்சட்டம் வடக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 90ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றபோதே மேற்படி சட்டம் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியதிச்சட்டம் குழுநிலை விவாதத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்துள்ளார்.

அதன்பின்னர் நியதிச்சட்டம் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் அறிவித்தார்.

குற்றப்பணம் கைமாறும் நியதிச்சட்டம் வட.மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்டது
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions