Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மாணவனின் திட்டத்தால் ஆச்சரியத்தில் நாசா
Posted By Super User on 05/04/2017 | தொழிநுட்பம் | Source: Athavan
மாணவனின் திட்டத்தால் ஆச்சரியத்தில் நாசா

பூமியையும் நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் புதிய திட்டத்தை கூறிய மாணவனால் நாசா ஆச்சரியம் அடைந்துள்ளது.

மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகளை எவ்வாறு அமைப்பது என்ற தலைப்பில் உலகளாவிய ரீதியில் நாசாவினால் நடத்தப்பட்ட போட்டி ஒன்றில் சிங்கப்பூரைச் சேர்ந்த சாய் கிரண் என்னும் 12 ஆம் வகுப்பு மாணவன் அதிர்ச்சிகரமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து Connecting Moon, Earth and Space மற்றும் HUMEIU Space Habitats  என்னும் பெயரில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்தும் சாய் கிரணின் முக்கிய திட்டமே பூமியையும், நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான்.

இதற்கு முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையில் மனித போக்குவரத்து பாதை அமைக்க வேண்டும் என கிரண் கூறியுள்ளார். அத்துடன் தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றுவது குறித்து ஆர்வம் செலுத்திவரும் நாசாவுக்கு மாணவனின் இந்த திட்டம் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவனின் திட்டத்தால் ஆச்சரியத்தில் நாசா
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions