Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Posted By Super User on 4/3/2017, | உள்நாடு | Source: க.கிஷாந்தன்
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தனது சகோதரனின் முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த வேளையில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை மெதகும்புர மத்திய பிரிவில் இந்த சம்பவம் 02.04.2017 அன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தையான வேலுசாமி விஜயராஜ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்தவரின் சகோதரனின் முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த வேளையில் ஈடுப்பட்டிருந்த போது, வெளிச்சத்திற்காக உபயோகிக்கப்பட்ட மின்குமிழின் மின்சாரம் தாக்கியதால் இவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
 

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions