Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அஷ்ரப் செய்தால் மார்க்கமாகுமா..?
Posted By Rifqi Ali on 4/2/2017, | உள்நாடு | Source: Editor Sanakyam
அஷ்ரப் செய்தால் மார்க்கமாகுமா..?

அஷ்ரப் செய்தால் மார்க்கமாகுமா..?

ஹக்கீம் அவர்கள் கும்பிடு போட்டதை சிலபேர் பேஸ்புக்குகளில் போட்டு கேலி செய்கின்றார், ஏன் கேலி செய்யவேண்டும் ?
மற்றவர்களும் அப்படி நடந்து கொள்ள வில்லையா ? என்று கேட்டுவிட்டு, அதற்கு ஆதாரமாக தீகவாபி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் பூத்தட்டை ஏந்தி கொண்டு வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கும் போகாமல் புத்தர் சிலைக்கு முன்னால் கும்புடு போடவில்லையா ?

அப்படி என்றால் ஏன் ? எங்கள் தலைவர் ஹக்கீம் அவர்கள் கும்புடு போட்டதை மட்டும் தப்பாக நினைக்கின்றீர்கள்.......!
பொத்துவில் கூட்டத்தில் வைத்து இதை சொன்னது மூத்தபோராளி கல்முனை ஜவாத் அவர்கள்...!

இதனை நாங்கள் சொல்லிருந்தால்..! என்ன கூறியிருப்பீர்கள்...?

அன்று  தீகவாபியிலே அஸ்ரப் அவர்கள் நடந்து கொண்ட விதம் தவறானது என்று அன்றய ஜம்மியத்துல் உலமா சபை கண்டனம் செய்து அறிக்கையும் விட்டிருந்தார்கள் , 
திகவாபி பக்கத்தில் இருக்கும் ஊரான இறக்காமத்துக்கு சென்று ஜும்மா கடமையை நிறைவேற்றாமல் , தீகவாபியின் ஒரு பகுதியிலே அஷ்ரப் அவர்களின் தலைமையில் (ளுஹர்) தொழுவித்த விடயமும் உலமா சபையின் கண்டனத்துக்கு காரணமாகும்...

எவராக இருந்தாலும் தவறு தவறுதான்....

இந்த தலைவர் செய்த தவறை நியாயப்படுத்துவதற்கு, அந்த தலைவர் செய்த தவறைக் கூறி காப்பாற்ற முனைவதும், அதனை முஸ்லிம் சமூகம் கேட்டுக் கொண்டிருப்பதும் தலைவிதி என்று நினைக்கிறேன்.

மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயங்களில் யாராவது தவறு செய்தால் அதற்கு ஆதாரமாக நபி வழி அல்லது சஹாபாக்கள் , இமாம்கள் இப்படி செய்திருக்கின்றார்கள் என்று ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம், மாறாக ஹக்கீமின் ஒரு தவறான செய்கையை நியாயப்படுத்த, இன்னொருவர் செய்த தவறையா ஆதாரமாக காட்டுவது.....

இறைவனை பயந்து கொள்ளுங்கள்....!

எம்.எச்.எம்.இப்றாஹிம்...
கல்முனை

அஷ்ரப் செய்தால் மார்க்கமாகுமா..?
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions