Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அன்பின் ஜவாதுக்கு
Posted By Rifqi Ali on 4/1/2017, | உள்நாடு | Source: Editor Sanakyam
அன்பின் ஜவாதுக்கு

அன்பின் ஜவாதுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்!

அடிப்படையில் நாம் இருவரும் நல்ல நன்பர்கள்    என்பதைவிடவும்  முஸ்லிம் காங்கிரஸின் 'பத்ர் ஸஹாபாக்கள்'என்பதே உண்மை.

எமது ஸ்தாபகத்தலைவரின் கொள்கையிலும் நடவடிக்கையிலும் ஈர்ப்புக்கொண்டு கட்சிக்காக உடலாலும் பொருளாலும் தனியாய் பங்களிப்புச்செய்துகொண்டிருந்த எனக்கு உதவியாய் இருந்து பங்களிப்பில் பங்கெடுத்துக்கொள்வதற்கு   உளவியல்,உறவியல் காரணங்களிலிருந்து விடுபட்டு என்னூடாக முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இக்கட்டான பல கட்டங்களில் கட்சியையும் ஸ்தாபரையும் பாதுகாப்பதில் உங்கள் உயிரையும் துச்சமாய் நினைத்து செயல்பட்ட சந்தர்ப்பங்களுக்கு நான் சாட்சிவேன்.

தொழில்மீது கவனம் செலுத்தாததால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த எனக்கு இன்று கோடிகளுக்குமேல் பெறுமதிமிக்க பத்து இலட்சம் ரூபாயை 90 களில் பங்கு முதலீடாக தந்தீர்கள்.
எனது கவனம் முழுவதும் முஸ்லிம் காங்கிரஸில்  இருந்ததால் உங்கள் புதிய முதலீட்டாலும் எந்த பிரயோசனத்தை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை.

பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருந்த உங்களுக்கு அன்றைய பத்து இலட்சத்தின் குறைபாடு எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு இன்றைய உங்கள் வாழ்க்கையே சாட்சி. அதன் சிரமங்களை உங்கள் மனைவி மக்களாகிய எனது அன்புத்தங்கையும் பாசத்துக்குரிய மருமக்களும் சகித்துக்கொண்டிருப்பதை நான் அறியாமலில்லை

என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் சமூகத்தை அடமானம் வைத்து அழ்ழாஹ்வுக்கு மாறு செய்து  பொருளீட்டுவதிலிருந்து தவிர்ந்துகொள்ளவே இருவரும் முயன்றுள்ளோம்.

தேவைகளின் காரணமாக இன்றுவரை கடணாளிகளாய் வாழ்கின்றோம்.

திருப்பிக்கொடுக்கும் நோக்குடன் வாங்கிய கடன்களை திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பை எல்லாம் வல்லோன் தந்திடுவான் என்ற நபி மொழியை முழுமையாய் நம்பியவர்களாக காத்திருக்கின்றோம்.

நிட்சயமாக நமது கடன்களை கொடுக்கப்போதுமான வாய்ப்பு வசதிகளை ஹலாலான முறையில் தந்துடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்த நஷ்டமும் இல்லை.

அவன் கருனையாளன். கற்பனைக்கு எட்டாத வகையில் எமது கஷ்டங்களை போக்கிடுவான்.

நாமும் தவறுகள் செய்திருந்தாலும் பாவங்களுக்கு அஞ்சாதவர்களாய் துணிவு கொண்டதில்லை.

அதிகாரங்களை பொறுப்பாக கையாள நினைப்பவர்களாகவே எப்போதும் இருந்துள்ளோம் என்பதற்கு ஒருவருக்கு மற்றவர் சாட்சிகளாவோம். அள்ளாஹ்வும் அனைத்தையும் நன்கறிந்தவன்.
எமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் குறையில்லாத கூலியை ஈருலகிலும் குறைவின்றி வழங்கிட வல்ல ரஹ்மான் போதுமானவன்

நபியர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து பெண் தலைமையை ஏற்பதிலிருந்து உங்களை தடுப்பதற்காக ரவூப் ஹகீமின் தலைமையை நீங்கள் ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தியதில் தவறுசெய்துவிட்டதாக நான் வருந்தவில்லை.

ஆனால் ஹகீமால் இனியும் சமூகம் கேவலப்படக்கூடாது என்பதைக்கொண்டு பகிரங்கமாய் எச்சரித்து மக்களை ஹகீமிடமிருந்து விடிவிக்கும் முயற்சியில் முன்னோடியாய் எம்முடன் இணைந்து செயல்படவேண்டிய நீங்கள்; ஹகீம் இல்லாவிட்டால் முஸ்லிம்களுக்கு தலைமைதாங்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்று நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக கேட்டதாக சமூக வலைத்தளங்களூடாக அறிந்து மிகுந்த வேதனையடைந்ததின் பிரதிபலிப்பே இந்த பகிரங்க கடிதமாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது அரசியல் உச்சபீடமான பொலிட் பியூரோவில் அங்கத்தர்வர்களாக இருந்த அத்தனைபேர்களும்  தலைமைத்துவ தகுதி கொண்டவர்களே என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்க எந்த நியாயமும் இல்லை.

ஓரிருவர் சுய இலாபங்களுக்கு விலைபோய் சமூகத்தை நிர்க்கதிக்குள்ளாக்கிவிட்டதால்  அத்தனைபேரும் தகுதியற்றவர்களாய் ஆகிவிடமாட்டார்கள்.

முஸ்லிம் காங்கிரஸின் பத்ர் ஸஹாபாக்களான அதாவுள்ளாஹ், ஹிஸ்புள்ளாஹ் போன்றோர் தங்கள் தலைமைத்துவ தகுதியை நிரூபித்திருக்கையில் உங்களிடம் அந்த ஆற்றல்கள் இருக்குமென்பதில் எனக்கு சற்றும் சந்தேகமில்லை.

ஆனால் ஹகீமை விட்டால் வேறு தலைவர் இல்லையென நீங்கள் கருதுவது உங்களையும் ஹகீம் அடிவருடிகளில் ஒருவராக  நினைக்கத்தூண்டுகிறது.

இருந்தாலும், உங்கள் பக்க நியாயங்களை நாம் அறியும் வாய்ப்பு அமையும் வரை உங்கள் கருத்தை வன்மையாக மறுதலிப்பதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு தகுதியான அமீர் ஒருவரின் வளிகாட்டலில் நேர்மையான தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பதற்காக எம்மிடம் கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம், பிராத்திக்கிறோம்!

மேலும், ஆட்சி அதிகாரங்களை வழங்குவதும் பிடுங்குவதும் அரசர்களுக்கெல்லாம் பேரரசனான ஏக அழ்ழாஹ்வின் அதிகாரத்தில் மட்டுமேயுள்ள அம்சமாகும்.

உங்கள் மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்யத்தேவையான அதிகாரம் அந்தஸ்துக்களை வல்ல இறைவன் நாடினால் கிழக்கின் எழ்ச்சியூடாக வழங்கிடுவான்.

ஆகவே, சமூகத்தை விற்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நயவஞ்சக்கூட்டத்திலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கும் பாரிய பணியை வெற்றிபெறவைக்க உங்களின் அதிகூடிய அனுசரனையை பகிரங்கமாய் எதிர்பார்க்கிறேன்.

இவ்வண்ணம்

வபா பாறுக்
மு.கா. பத்ரு ஸஹாபி

01/04/2017

அன்பின் ஜவாதுக்கு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions