Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அவகாசம் முடிகின்றது
Posted By Rifqi Ali on 3/25/2017, | கவிதைகள் | Source: Editor Sanakyam
அவகாசம் முடிகின்றது

அவகாசம் முடிகின்றது
------------------------------------------

இன்னும் ஒதுங்கவில்லையா நீ
பாதங்களில் அணிந்திருப்பவற்றை கன்னங்களுக்கு
ஓங்குவதை நான்
வெறுக்கிறேன்

பிடிபிடியாய் அரிசி சேர்த்து
நேர்ந்த முட்டிக்குள் 
வருடத்தை எல்லாம் ரமளான்களாக்கி
தவமிருந்து என்னுடையோர்
உயிரைக் குரிதியாய் பீறிட ஓடவிட்டு நோக்காடே வாழ்க்கையாக்கி
பெற்றெடுத்த செல்வ மரத்தை

 ஆளுக்கு ஒருபுறமாய் கூறு போட்டுக்கிழித்து
அண்ணனுக்கும் மச்சானுக்கும் சொகுசுக்கட்டில்கள் செய்து மீதமுள்ள சொச்சத்தை  கோடிகளுக்கு விற்று பூமியிலுள்ள சுவனங்களை எல்லாம்
உங்களுக்கு சொந்தமாக்கி

சதிகாரக்கூட்டத்தின் பொறாமை வலையில் சிக்குண்ட மாமனிதனையும் பறி கொடுத்து,  

என் தேசியம்
நாதியில்லாத மக்களாய் நடுத்தெருவுக்கு வந்தது போதாதா
இ்னி ஒரு கணமும் அனுமதியில்லை
விட்டு விட்டு ஓடுங்கள்!

எம் உயிரினும் மேலான் உடன் பிறப்புக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம்
எமது இறைவன் 
எல்லாம் வல்லோன் 
அல்லாஹ்தஆலா
அவன் புறத்திலிருந்து தந்துள்ளான்  ஞானத்தை குர் ஆன், ஹதீஸ் எனும் ரூபத்தில்

என்ன பாஷையில் பேச விரும்புகிறீர்கள்
ஆண்டு முடித்த ஆங்கிலத்திலா
ஆழப்போகும் தமிழிலா?
எதுவானாலும் நாம் தயார்
எம்மிடம் இன்னுமொரு பாஷையும் உண்டு 
உங்களால் பேச முடியாதது அது
உங்கள் தர்பார்களை தவிடு பொடியாக்கும் எம் தவப்பிராத்தனைகள் அவை!
எம் தேசியத்தின் ஒவ்வொரு கலங்களிலும் ஓட வேண்டிய இரத்தத்துடிப்பு!

வேரையும் அறுத்து
காயவைத்துப் பல்லுக்குத்திகள் செய்யும் கம்பேனிகளுக்கு சில்லறை விலைக்கு வித்துவிட விலைபேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்
செத்தாலும் விடமாட்டோம்!

நம்மூரான் 
பத்ரீன் பக்கத்திலிருக்கும்வரை
நம்பியிருந்த ஒரே ஒருத்தனையும் சொல்லாமல் 
தூங்கியெறிந்தால்
சும்மாதான் விட்டுவோம் என நினைத்தாயா?
இடையில் புகுந்தவனே!

சொல்லாமல் பாயைக்கட்டடா
நட்டிய எங்களுக்கு தெரியும்
வேரில் இன்னுமோர் மீட்சி செய்ய

யாரடா நீ எம்மை ஆழ
நாம் ஆழ்ப்பிறந்தவர்கள்
எம்மவனுக்கு மட்டுமே மந்தைகளாவோம்.
ஓடிவிடுங்கள் 
கூட்டங்களோடு
அவசரமாய்

வபா பாறுக்
கிழக்கின் எழுச்சி

அவகாசம் முடிகின்றது
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions