Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்: எச்எம்டி அதிரடி
Posted By Super User on 3/25/2017, | தொழிநுட்பம் | Source: Maalaimalar
ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்: எச்எம்டி அதிரடி

நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் சுமார் 120 நாடுகளில் வெளியிட எச்எம்டி குளோபல் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் தற்சமயம் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் இவற்றின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இவை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் எச்எம்டி குளோபல் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை 120 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.  

நோக்கியா 3 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 2650 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 5.2 இன்ச் IPS LCD 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை ஸ்கேனர், 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. 

விலையை பொருத்த வரை நோக்கியா 3 EUR 139 அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,800, நோக்கியா 5 EUR 189 அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,500 மற்றும் நோக்கியா 6 EUR 229 இந்திய மதிப்பில் ரூ.16,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியா பீச்சர் போனான 3310, EUR 49 அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

 

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions