Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
SLIM-NIELSEN மக்கள் விருதை வென்றது சிங்கர் ஸ்ரீ லங்கா
Posted By Super User on 3/24/2017, | வணிகம் | Source: Athavan
SLIM-NIELSEN மக்கள் விருதை வென்றது சிங்கர் ஸ்ரீ லங்கா

சிங்கர் ஸ்ரீ லங்கா, அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகள் நிகழ்வில், தொடர்ந்து 11ஆவது ஆண்டாகவும், இலங்கையில் மிகவும் பிரபலமான வர்த்தகநாமம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

(வருடத்தின் இளையோரின் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமம், நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் – வருடத்தின் மிகச் சிறந்த வர்த்தகநாமம் ஆகிய விருதுகளுடன், வருடத்தின் SLIM-Nielsen மக்களின் வர்த்தகநாமம் – 2017) போன்ற விருதுகளையும் தனதாக்கியிருந்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தால், ஏற்பாடு செய்யப்பட்ட SLIM-Nielsen மக்கள் விருதுகள் நிகழ்வு, வர்த்தகநாமங்கள், பிரபலங்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என கடந்த ஆண்டில் மக்களின் சிந்தனைகளில் கணிசமான செல்வாக்கினை சம்பாதித்துள்ளவற்றில், தமக்கு விருப்பமானவற்றை மக்களே தெரிவு செய்வதற்கு இடமளிக்கின்றது.

இதற்காக 25 மாவட்டங்களிலும் எழுந்தமான மாதிரி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 18 முதல் 50 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்நோக்கத்திற்காக முழுமையான கருத்துக்கணிப்பு ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வகையிலான நேர்காணல்களை நடாத்துவதில் விசேட தேர்ச்சி பெற்ற Nielsenfis ஆராய்ச்சி அதிகாரிகளால் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தை உபயோகித்து நேரடி நேர்காணல் மூலமாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SLIM-NIELSEN மக்கள் விருதை வென்றது சிங்கர் ஸ்ரீ லங்கா
Related Posts
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions